திங்கள், 31 ஜனவரி, 2011

ஞானம் பிறந்தது...

வந்துகொண்டிருக்கும்போது
வழுக்கி விழுந்துவிட்டேன்
கூடவே வந்தார்கள்
பெற்றவர்கள்
உற்றவர்கள்
இன்னும் பலர்....
பார்த்து நடக்க
உனக்கு பார்வை போய்விட்டதா...?
அப்பா சொல்லிவிட்டு
அடுத்தவர்களோடு நடந்துகொண்டிருந்தார்
எழுந்து வா தம்பி
என்றார் அம்மா...
ஓடிவந்து தூக்கினான்
நான் சாதி பார்த்து
இத்தனைநாள் ஒதுக்கிவைத்த நண்பன்...
இப்போதுதான்
எனக்குள் சுடலை ஞானம் பிறந்தது...

இராமசாமி ரமேஷ்
அளம்பில்.

1 கருத்து:

  1. வழுக்கிவிழுவதைதடுப்பது, அல்லது காப்பாற்றுவது மனிதசெயல்எனலாம்.
    இக் கவிதையை சாதியகட்டமைப்புக்குள் வைத்து புதியவடிவத்தில் அமைத்திருந்தால்
    இக் கவிதை பேசப்படும்.தொடர்க வாழ்த்துகள்.

    வதிரி,சி.ரவீந்திரன்.

    பதிலளிநீக்கு