வளமாக செழித்துக் கிடந்த தேசம் இப்போது வரண்ட
பாலைவனமாய் காட்சியளிக்கின்றது. அபிவிருத்தி என்னும் வசந்தம் எப்போது
இப்பிர தேசத்தை நோக்கி வீசும் என்று எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது.
எருக்கலையும் நாகதாளிச் செடி களுமாய் சுடுகாட்டின் சாயலில் தெரிகின்ற
மண்ணில் உருக்கு லைந்த கட்டடங்கள் காட்சியளிக் கின்றன. பனை ஓலைகளினாலும்
சிறு தடிகளினாலும் அடைக்கப்பட்ட வேலி களின் நடுவே தறப்பாள் மற்றும்
ஓலைகளில் வேயப்பட்ட சிறு குடிசைகள் காணப்படுகின்றன. ஆடம்பரமோ அடிப்படை
வசதிகளோ எமுதுவுமே இல்லாத நிலையில் கடலிலே அன்றாடம் உழைக்கும் வருமானத்தைக்
கொண்டு அன்றைய பொழுதைக் கழிக்கின்ற சமூகமாக வறுமைக்கு வாக்கப்பட்டு போய்
சிதைந்துகொண்டிருக்கிறது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உப்புமாவெளி என்னும்
கிராமம்.
சுனாமி
என்கின்ற அரக்கனால் துரத்தப் பட்ட இந்த உப்புமாவெளி பிரதேச மக் கள் 2006
ஆம் ஆண்டுதான் இந்தப் பிர தேசத்திற்கு வந்து குடியேறினார்கள். தொண்டு
நிறுவனமொன்று இம் மக்க ளுக்குரிய வீட்டுத் திட்டங்களையும் கிராமத்தின் ஏனைய
பொதுத் தேவை களையும் பூர்த்தி செய்து கொடுப்பதாய் வாக்களித்து ‘சுனாமி
நலன்புரி முகாம்’ களில் வசித்த மக்களைத் தத்தெடுத்துக் கொண்டது. அதன்
பின்னராவது தம் வாழ்க்கை கொஞ்சமேனும் ஏற்றம் பெறும் என எதிர்பார்ப்போடு
வாழத் தொடங்கினார்கள் இப்பிரதேசத்து மக்கள். எத்த னையோ கனவுகளோடு வாழ
முற்பட்ட இம்மக்களது வாழ்க்கை அந்த தொண்டு நிறுவனத்தின் செயற்பாட்டினால்
சோர்ந்து போனது. வீடமைப்பு செயற்றிட்டம் ஆரம்பமாகி இரண்டு வருடங்கள் கழிந்த
நிலையிலும் உப்புமா வெளி பிரதேசத்திற்கு ஒரு வீதிகூட அமைக்கப்படவில்லை.
ஒப்பந்தப்படி வீதி, பொதுக்கிணறு, பாடசாலை என ஒரு கிராமத்திற்குத் தேவையான
அத்தனை வளங்களும் ஏற்படுத்தித் தரப்படும் என்று சொன்ன நிறுவனம் இடைநடுவில்
காணாமல் போனது. இந்த இரண்டு வருட இடைவெளியில் 87 குடும்பங்கள் வசிக்கும்
இக்கிராமத்துக்கு 50 வீடுகளை மாத்திரம் கையளித்துவிட்டு தமது கடமை
முடிந்ததாய் நிறுவனம் விடைபெற்றது. ஏக்கத்தோடும் எதிர்பார்ப் போடும்
காத்திருந்த மக்கள் விழிநீர் சிந்த விடைதேடி அரசாங்க அதிபர் காரியாலயம்
நோக்கி நடந்தார்கள். நாட்கள்தான் நகர்ந்தனவே தவிர நடக்க வேண்டிய எதுவுமே
நடக்கவில்லை. எங்கெல்லாமோ மடல் வரைந்தார்கள். எத்தனையோ பேரிடம்
மன்றாடினார்கள். எதுவுமே தேவையில்லை. வீட்டைக் கட்டித் தாருங்கள்
என்பதுதான் இந்த வறிய மக்களின் விண்ணப்பமாக இருந் தது. எல்லாமே செவிடன்
காதில் ஊதிய சங்காகவே ஒலித்தது. செவி கொடுத்து செயற்படுத்த எந்த அரச பணி
யாளரும்
தயாராக இல்லை. கிராம சேவகர் கூட தன் வேலையிலேயே கவனமாக இருந்தார்.
இப்படியாய் அவலத்தைச் சுமந்தபடி நகர்ந்து கொண்டிருந்த இந்த உப்புமாவெளி
கிராம மக்க ளுக்கு அடுத்ததாய் வந்து சேர்ந்தது போர் எனும் துன்பம். அதிலும்
துரத்தப்பட்டு இருக்க இடமில்லா மல் எல்லாவற்றையும் இழந்து அகதிமுகாம்களில்
அடைக்கப்பட்டு மீண்டும் மீள்குடியேற்றம் என்ற பெயரோடு ஊர்
திரும்பினார்கள்.
யாளரும்
தயாராக இல்லை. கிராம சேவகர் கூட தன் வேலையிலேயே கவனமாக இருந்தார்.
இப்படியாய் அவலத்தைச் சுமந்தபடி நகர்ந்து கொண்டிருந்த இந்த உப்புமாவெளி
கிராம மக்க ளுக்கு அடுத்ததாய் வந்து சேர்ந்தது போர் எனும் துன்பம். அதிலும்
துரத்தப்பட்டு இருக்க இடமில்லா மல் எல்லாவற்றையும் இழந்து அகதிமுகாம்களில்
அடைக்கப்பட்டு மீண்டும் மீள்குடியேற்றம் என்ற பெயரோடு ஊர்
திரும்பினார்கள்.
வன்னியே
சிதைக்கப்பட்டுதானே கிடந்தது. உப்புமாவெளி மட்டும் விதி விலக்கா என்ன?
மீண்டும் சிறிது சிறிதாக வாழ்வில் அரும்பத் தொடங்கி னார்கள். இழப்புகளை
சிறிது சிறிதாக மறந்த இம்மக்கள் இயல்பு வாழ்க்கைக் குத் திரும்பினார்கள்.
ஊரைவிட்டு ஓடும்போது இம்மக்களுக்கு தம் உயிரை விட வேறொன்றும் பெரிதாகத்
தெரியவில்லை. வீட்டு தளபாடங்கள் எல்லாம் சிதைந்தது போக சில எஞ்சின. அவையும்
களவாடப்பட்டன. திரும்பி வந்த மக்கள் நிலைமையைப் பார்த்து பதறித்தான்
போனார்கள். காவலரண்கள் எல்லாம் இம்மக்களுடைய கதவு, ஜன்னல் மற்றும்
ஓடுகளினால்தான் போடப் பட்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு
மனதுக்குள்ளேயே புழுங்கிய வாறு ஊமையானார்கள். யுத்தத்தில் சிதைந்த மக்களது
பிரதேசங்களை சில தொண்டு நிறுவனங்கள் பொறுப்பெடுத்து சேவை செய்தன. ஆனால்
இந்த உப்புமாவெளியை மட்டும் வந்து பார்த்துவிட்டு போனார்கள். போனவர்கள்
திரும்பி வரவேயில்லை.
யுத்தம்
நிறைவடைந்து இரண்டு வருடங்கள் தீர்ந்து விட்டன. இன்னும் இம்மக்களது
அடிப்படை வசதிகள்தானும் செய்து கொடுக் கப்படவில்லை. மின்சார வசதியில்லை,
வீதி, பாடசாலை, போக்குவரத்து, கிணறு, சுகாதார நிலையம் அல்லது வைத்தியசாலை
என இவை எதுவுமே இல்லாத நிலையில் இக்கிராமம் இன்னும் இருக்கின்றது.
இக்கிராமத்துப் பிள்ளைகள் அடுத்த ஊரிலுள்ள பாடசாலைக்கு அதுவும் நடந்துதான்
செல் கின்றனர். போக்குவரத்து வசதியில்லாத ஒரே காரணத்தால் அண்மையில் மூன்று
அப்பாவி உயிர்கள் அநியாயமாக பறிபோய்விட்டன. பாம்புக்கடிக்கு இலக்கான
மூவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாது போனமை யால் இவ்
அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. போக்குவரத்து வசதி மட்டும் இருந் திருந்தால்
அம்மூன்று உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கும். வீதிகள் எல்லாம் மணல்
மேடுகளாய் காட்சியளிக்கும் நிலையில் எப்படி போக்குவரத்து இடம்பெறும்?
சாதாரண
நிலையில் உள்ள இந்த மக்களால் இனியும் எங்கும் அலைய முடியாது. அதனால்
யாராவது வந்து உதவிசெய்வார்களா என காத்திருக்க மட்டுமே முடிகின்றது. இது
தொடர்பாக இப்பிரதேச கிராம சங்கத் தலைவர் ‘நாங்களும் போகாத இடமில்லை.
பேசிப்பார்க்காத ஆட்களில்லை. எல்லோரு மே விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம்
என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் பதில் கிடைப்பதாகவோ அல்லது மாற்றம்
வருவதாகவோ இல்லை’ என் கிறார்.
![]() |
| யுத்தத்துக்குள் சிக்கிய வீடுகள் |
மீனவர்
சங்கத் தலைவரான ஜோன் மென்கோ ‘இந்த இடத்திற் கு இந்த மக்கள்
மீள்குடியேற்றப் பட்ட காலத்திலிருந்து எந்தவித மான வேலைத்திட்டங்களோ உத
விகளோ இதுவரை பூரணமாக கிடைக்கவில்லை. உரியவர்களிடமும் பொறுப்பானவர்களிடமும்
போதுமான அளவுக்கு பேசி விட்டோம். எதுவுமே சாத்தியமாகவில்லை. இதை
தீர்க்கும் வழி இனி எங்களுக் குத் தெரியவில்லை’ என்று கவலையோடு
தெரிவித்தார். எங்களுக்கு எதுவுமே தேவையில்லை. மழைக்காலத்தில் பிரச்சினை
இல்லாமல் இருக்க ஒரு வீடும் போக்குவரத்துக்காக ஒரு பாதையும் தான் வேண்டும்.
வேறு எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம் என்று உருக்கமாக கேட்கின்றனர்
இம்மக்கள்.
துயர்சுமந்து வாழும் இந்த உப்புமாவெளி மக்களின் வேதனை குரலுக்கு இனியாவது யாராவது செவிசாய்ப்பார்களா?



















