இரகசியங்கள் அதிகமாய்
பேசிக்கொண்டோம்....
அப்போது புரியவில்லை எனக்கு
நம் காதலும் இப்படி
இரகசியமாயே போய்விடும் என்று!!
யாருக்கும் தெரியாமல்
நமக்குள்ளே புதைக்கப்பட்ட காதல்
உன்னை பாதுக்காத்துக் கொள்ளும்
போர்வையாகிப் போனது...
எனக்குத் தானே...
மனதைக் கொன்று
உயிரைத் தின்னும்
சாவுக்கான அழைப்பிதலாய்
மாறி விட்டது....
மன்னித்துக் கொள்
உன்னைக் காதலித்து
உன் நேரங்களை களவாடியதர்க்கு!!
உன் வாழ்க்கைக்கு என்னை
பாவித்துக் கொண்டாய்....
நான்தான்
புரியாமல்....
மௌனித்துப் போனேன்
உன் அன்பின் நிறைவினால் ...
இனியும் ...
வாழ மாட்டேன் உனக்காக
மாறப் பார்க்கிறேன்
உன்னை மறக்குமளவுக்கு...
இல்லையேல்...
மரணத்தை மணந்து கொள்கிறேன் நிம்மதியாய்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக