புதன், 25 ஏப்ரல், 2012

எனக்குப் பிடித்தவர்கள் கலைத்துறையில் ......

பாடகர் உன்னிகிருஷ்ணன்
 மென்மையான பாடல்களாலும் பக்திப் பாடல்களாலும் யாரும் தொட முடியாத இடத்திலிருக்கும் பாடகர் உன்னிக்கிருஷ்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இவரது "நறுமுகையே... நறுமுகையே'' பாடல் என்னைக் கவர்ந்த பாடலாகும். 
அனுராதா ஸ்ரீராம் 


எவருக்கும் கிடைக்காத அறிய குரல்வளம் அனுராதாவுடையது என்றால் இது மிகையல்ல!  அடிக்கடி குரல் மாற்றிப் பாடும் இவரது அசாத்திய திறமை எளிதில் யாருக்கும் வந்து விடாது.  












பாடகி சித்ரா



பிறப்புசூலை 27, 1963(அகவை 48)
திருவனந்தபுரம்,கேரளா, இந்தியா
இசை வகை(கள்)பாடகி,கருநாடக இசை
தொழில்(கள்)பாடகி 
இசைக்கருவிகள்பாடல்
இசைத்துறையில்1982–present
இளம் இசையமைப்பாளர் அனிருத் 
எனக்குப் பிடித்த அனிருத்! இளம் வயதில் எத்தனை பக்க பலம் இருந்தாலும் திறமை  இல்லாமல் உழைப்பு இல்லாமல் பிரகாசிக்கவோ வெற்றியடையவோ முடியாது. இருப்பினும், அனிருத்தின் வெற்றி இப்போதுள்ள இளம் முயற்சியாளர்களுக்கு  ஒரு வழிகாட்டல் தான்...
உலகின் சந்து, பொந்து மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலி(ளி)த்து கொண்டிருக்கும் ஒரு பாடல் என்றால், அது கொலவெறி தான். முதல் படத்திலேயே, அதுவும் படம் வெளிவருவதற்கு முன்பே ஒரே பாட்டிலேயே உலகம் முழுவதையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர் கொலவெறி பாடலின் இசையமைப்பாளர் அனிருத். பலர் இப்பாட்டை வரவேற்ற ‌போதிலும், சிலர் இந்தபாட்டை எதிர்த்தும் வருகின்றனர். 
இந்நிலையில் தினமலர் இணையதளத்திற்கு அனிருத் அளித்த பிரத்யேக பேட்டியில், கொலவெறி பாட்டை இவ்வளவு பெரிய ஹிட்டாக்கிய ரசிகர்களுக்கு நன்‌றி என்றும், தொடர்ந்து நல்ல நல்ல பாட்டுகள் கொடுக்க தான் முயற்சி பண்ணுவதாகவும் தெரிவித்தார். மேலும் இப்பாட்டு தொடர்பான எந்த விதமான கேள்விக்கும் தான் பதிலளிக்க தயாராக இருப்பதாக அனிருத் கூறியுள்ளார்
அனிருத்! வாழ்த்துக்கள்.... இன்னும் பெருகட்டும் உங்கள் சாதனைகளின்  நீட்சிகள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக