புதன், 22 பிப்ரவரி, 2012
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012
இராமசாமி ரமேஷ்: இது அவளின் நினைப்பு.....
இராமசாமி ரமேஷ்: இது அவளின் நினைப்பு.....: வறுமை வாழ்க்கை அத்தியாயங்களை அவசரமாய் தின்று முடித்துவிட வாலிபர்களின் வரதட்சனைப் போரிலே தலை நிமிர்ந்து தாக்குப் பிடிக்க முடியாமல் தன் இ...
இது அவளின் நினைப்பு.....
வறுமை வாழ்க்கை அத்தியாயங்களை
அவசரமாய் தின்று முடித்துவிட
வாலிபர்களின் வரதட்சனைப் போரிலே
தலை நிமிர்ந்து
தாக்குப் பிடிக்க முடியாமல்
தன் இளமையை
காலப் பேய்க்கு காணிக்கையாக்கிவிட்டு
மனசு முழுக்க
வேதனைக் கீறல்களின் வலியோடும்
விழிகளில் எல்லாம்
அஸ்த்தமனமாகிப் போன
மாங்கல்யக் கனவின் தவிப்போடும்
தனக்கான குங்குமத்தை
தரப்போகும் இதயமுள்ளவனை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்
இங்கும் ஒரு முதிர்கன்னி.....
நடவாது என்று தெரிந்த பின்பும்...!!!
இராமசாமி ரமேஷ்
அளம்பில்
அவசரமாய் தின்று முடித்துவிட
வாலிபர்களின் வரதட்சனைப் போரிலே
தலை நிமிர்ந்து
தாக்குப் பிடிக்க முடியாமல்
தன் இளமையை
காலப் பேய்க்கு காணிக்கையாக்கிவிட்டு
மனசு முழுக்க
வேதனைக் கீறல்களின் வலியோடும்
விழிகளில் எல்லாம்
அஸ்த்தமனமாகிப் போன
மாங்கல்யக் கனவின் தவிப்போடும்
தனக்கான குங்குமத்தை
தரப்போகும் இதயமுள்ளவனை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்
இங்கும் ஒரு முதிர்கன்னி.....
நடவாது என்று தெரிந்த பின்பும்...!!!
இராமசாமி ரமேஷ்
அளம்பில்
வெள்ளி, 17 பிப்ரவரி, 2012
மரணம் சுமந்தவர்கள் நாங்கள்....
எங்கள் தேசம்
சுற்றுலாத் தளம் தான்
உங்களுக்கு......
எங்களின் உறவுகள்
பட்டினி கிடந்து துடிதுடித்து
மாண்டு போனதும்
அங்கங்களை இழந்து
ஊனத்தோடு உழல்வதும்
சொந்த மண்ணில்
அகதிகளாய் அலைவதும்
உங்களுக்கு
விருந்தாகும் விடயங்கள் தான்
ஏனெனில்.....
மரணத்தை மனக் கண்ணில்
காண்பவர்கள் நீங்கள் ...
நாங்களோ ......
நாளாந்தம் மரணத்தை சுமந்தவர்கள்,,,,,,,,,,
சுற்றுலாத் தளம் தான்
உங்களுக்கு......
எங்களின் உறவுகள்
பட்டினி கிடந்து துடிதுடித்து
மாண்டு போனதும்
அங்கங்களை இழந்து
ஊனத்தோடு உழல்வதும்
சொந்த மண்ணில்
அகதிகளாய் அலைவதும்
உங்களுக்கு
விருந்தாகும் விடயங்கள் தான்
ஏனெனில்.....
மரணத்தை மனக் கண்ணில்
காண்பவர்கள் நீங்கள் ...
நாங்களோ ......
நாளாந்தம் மரணத்தை சுமந்தவர்கள்,,,,,,,,,,
திங்கள், 13 பிப்ரவரி, 2012
மரணம் தேடும் மனசு....
மரணத்தை
ஏற்றுக்கொள்ளத்தான்
என் இதயத்துக்கு
இப்போதெல்லாம் ரொம்பப் பிடிக்கிறது...
வாழ்தலில்
நான் பட்ட வலிகளின்
ரணங்களால்
உலகத்தை வெறுத்து
உறவுகளை ஒறுத்து
தனிமையில் எங்கோ
என் பயணத்தை நகர்த்திவிட
எண்ணிப் பார்த்தாலும்
சில கடமைகள்
காத்திருப்பது கண்டு
நிறுத்திக் கொள்கிறேன்
நகர்வின் தொடர்ச்சியை...
இருப்பினும் ...
இன்னும் ஒரு பொழுதில்
மீண்டும் நகரலாம் என் பாதங்கள்
இந்த மனிதமற்ற
உலகை விட்டு.....
------------------------------------------------------------------
அளம்பில்
இராமசாமி ரமேஷ்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)



