திங்கள், 25 ஜூன், 2012

கவிதாயினி அனுஷா கணேசலிங்கம்














jdJ 11tJ tajpNyNa ,yf;fpak; Gidaj; njhlq;fp ,w;iwtiu ftpij>rpWfij>thndhyp ehlfk; vd gyjsq;fspy; jdJ ,yf;fpag; Gyikia ntspg;gLj;jp tUk; ,iza thndhyp mwptpg;ghsUk; Ky;iy kz;zpy; ngau;nrhy;yf; $ba gilg;ghspAkhd ftpjhapdp mD\h fNzrypq;fj;jpid nkhopapd; Neu;fhzYf;fha; re;jpj;Njhk;. 
Ky;iyj;jPtpd; gpurpj;jp ngw;w fz;zfpak;kd; Myak; mike;Js;s tw;whg;gis jhd; ,tuJ gpwe;jkz;. fNzrypq;fk; Rf;fpyhNjtp jk;gjpapdupd; rpNu\;l Gjy;tp! xU jk;gpf;Fk; jq;iff;Fk; %j;j rNfhjup!
mikjpiaAk; Gd;difiaAk; jj;njLj;J itj;jpUf;Fk; mD\h> fiy. ,yf;fpak; njhlu;gha; Rthu];akhfg; Ngrpdhu;. mit cq;fSf;fhfTk;..
,yf;fpaj;jpy; cq;fsJ gpuNtrk; Fwpj;J
vdJ gjpNdhuhtJ tajpy; ,yq;ifapd; md;id thndhypahd njd;wy; thndhypapy; xU ngz;fSf;fhd epfo;r;rpapy;jhd; vdJ KjyhtJ ftpij xypgug;ghfpaJ. Mg;NghJ ehd; ghlrhiy khztp. ,Ug;gpDk;> me;j Muk;gk; vdf;Fs; ,yf;fpa Cw;wha; khwpg;NghdJ. njhlu;e;Jk; gy Clfq;fSf;F gilg;Gf;fis thu;j;Njd;. ,Jtiu> Mapuk; ftpijfisiaAk;> E}w;Wf;Fk; mjpfkhd rpWfijfisAk;> VO thndhyp ehlfq;fisAk; gilj;Js;Nsd;. Kf;fpakhf vdJ gilg;Gf;fSf;F tbfhyikj;jJj; je;j ngUik njd;wy; kw;Wk; tu;j;jf Nrit thndhypfisNa rhUk;. 
xU gilg;ghsp cUthf gpujhd fhuzk Clfq;fs; jhd;! MdhYk; ,g;Nghnjy;yhk; Clfq;fs; tsu;e;JtUk; Mf;fthjpfSf;Ff; fsq;nfhLf;fj; jtWfpwhu;fs; vd;W gyuhYk; $wg;gLfpwJ. ,J njhlu;ghf
cz;ikahd Fw;wr;rhl;Lj;jhd; ,J. vdJ gilg;GfSf;F gy Clfq;fs; fsk; nfhLj;jd. ,Ug;gpDk;> nghJthd ghu;itapy; $wg;Nghdhy;> jpwik vd;gJ ghuhKfkhf;fg;gl;L rpghu;Rfs;>gofpatu;fs;>gofpatu;fs;>vd;w uPjpapy;jhd; jw;NghJ Clfq;fs;>gilg;ghspfs;>fiyQu;fis mZFtJ njupfpwJ. vy;yh Clfq;fSk; ,jw;Fs; mlf;fky;y! Fwpj;j rpytw;Wf;F nghUe;Jk;. MfNt> Clfk; fiy vd;Dk; uPjpapy;jhd; jpwikfis kjpg;gpl;L fsk; nfhLf;f Ntz;LNk jtpu> Kfk;ghu;j;J milahsg;gLj;JtJ jtW. ,NjNghy Clfq;fspy; cs;stu;fSk;> jpwikf;F Kf;fpaj;Jtk; nfhLf;f Ntz;Lk;.
tho;tpaiyAk; md;whl elg;Gf;fisAk; gilg;Gf;fshf;Fk; ePq;fs;> ,yf;fpathjp vd;gNjhL> rQ;[Ptxyp ,iza thndhypapd; mwptpg;ghsuhfTk; gzpahw;WfpwPu;fs;. ,e;epiyapy; cq;fsJ thndhyp mDgtq;fs;...
vkJ thndhyp gw;wpr; nrhy;tnjd;why; Vuhskhd gjpTfisr; nrhy;yyhk;. rpW tajpypUe;Nj fiy ,yf;fpak;> thndhypj;Jiw kPJ mstw;w Mu;tKilats; ehd;. ,jd; fhuzkhf fle;j 2011,y; Ky;iyj;jPtpy; kapy;thfdk; nre;J}ud; vd;gtuhy; Muk;gpf;fg;gl;l ,iza thndhypjhd; rQ;[Ptxyp. ,jid ePq;fs;
www.sanjeevaoli.com  vd;Dk; ,izaj;jsj;jpy; gpuNtrpg;gjpD}lhff; Nfl;fyhk;. fpl;lj;jl;l %d;W khjq;fs; njupTnra;ag;gl;l VO mwptpg;ghsu;fSf;Fk; thndhypg; gapw;rpfs; toq;fg;gl;L itfhrp-07,y; cj;jpNahfg+u;tkhf 24kzpNeuKk; epfo;r;rpfisg; gilf;Fk; thndhypahfr; nraw;glj; njhlq;fpNdhk;.
    vkJ jha;kz;zpypUe;J epfo;r;rpfs; xypgug;ghfpaik vkf;nfy;yhk; epiwitj; je;jJ jpwik ,Ue;Jk; fsk; fpilf;fhky; fhj;jpUe;j vkf;f tug;gpurhjkha; fpilj;J mwptpg;ghsu; vd;Dk; mwpKfj;ijf; nfhLj;jJ cz;ikapy; rQ;[Ptxypjhd;. Vdf;Ff; fpilj;j ,t;tha;g;gpy;> ,d;dpir vd;Dk; epfo;r;rpia ehd; njhFj;J toq;fptUfpNwd;. Gyk;ngau;e;J thOk; vk;ktu;fSf;fhd epfo;rpfisg; gilj;J toq;fp tUfpNwhk; vd;fJ re;NjhrNk!
gd;Kfg; gilg;ghsp vDk; gjj;jpw;Fr; nrhe;jf;fhuuhd cq;fsJ ,yf;fpa Kaw;rpfs;
td;dpapYs;s vd;idg; Nghd;wtu;fSf;F Vw;gl;l fjp xNu khjpupj; jhd;! Aj;jj;jpd; Kd; Muk;gpj;j vdJ ftpijj; njhFjpf;fhd Ntiyfs;> Aj;jj;jhy; rpije;jd. vijANk  nra;aKbahj mfjpfshNdhk;. ,g;NghJ kPz;Lk; vd;Dila gilg;Gf;fis E}yhf;Fk; eltbf;iff;Fs; ,wq;fpAs;Nsd;. ,jd;gb tUfpd;w Mz;L ij khjk; rpWfijj; njhFjpnahd;Wk; ftpijj; njhFjpnahd;Wk; ntsptuTs;sd.
tho;j;Jf;fs;! Vuhskhd gilg;Gf;fis vOjpf; Ftpj;Js;s cq;fSf;F MjuTk; Cf;fKk; je;jtu;fis Qhgfpf;f KbAkh?
vdJ ngau; ntspNa njupfpwnjd;why; ,jw;Ff; fhuzk;> vdf;Ff; filj;j ey;y cs;sq;fs; jhd;. Kpf Kf;fpakhf mz;ikapy; kiwe;j njd;wy; thndhypapd; rpNu\;l mwptpg;ghsu; thndhypf; Fapy; ,uhN[];tup rz;Kfk; mk;kh vdf;F topfhl;bahfTk; MjuthfTk; kiwAk; tiuapy; ,Ue;jtu;. mtuJ ,og;G <Lnra;a KbahjJ. ,NjNghd;W vd; ngw;nwhu;fs; jhd; ehd; ,e;epiyf;F tsu fhuzkha; tpsq;fpatu;fs;. mtu;fSila Cf;Ftpg;Gk;> md;GNk vd;id mj;Jiwf;Fs; gpuNtrpf;fTk; gpufhrpf;ftk; nra;jd. Vidatu;fsha;> njd;wy; kw;Wk; tu;j;jfNrit> jkpo;r;Nrit> tre;jk;> #upak; Nghd;w thndhyp mwptpg;ghsu;fs; jahupg;ghsu;fSk; vd; gilg;GfSf;f fsk; jUfpd;w Rlu;xsp>kpj;jpud; mj;NjhL [Ptejp> nkhop Mfpa rQ;rpiffSk; vd; ,yf;fpa ez;fu;fSNk ehd; mile;j ntw;wpfSf;f gpujhd fhuzq;fs;. ,tu;fspd; Cf;Ftpg;Gj;jhd; vd;id cUthf;fpaJ vdyhk;.
,Wjpaha;> ,g;NghJ vOj;Jj; Jiwf;Fs; Eiofpd;w ,isatu;fSf;Fk; mwptpg;ghsuhf Ntz;Lnkd;W fhj;jpUf;Fk; jug;Gf;Fk; cq;fsJ MNyhrid...?
,uz;LNk r%fj;jpy; mjpfstpy; Mjpf;fk; nrYj;Jk; Clfq;fs; jhd;. ,Ug;gpDk;> ,uz;bYNk ntw;wpailtnjd;gJ Rygky;y! Fwpj;j Jiwrhu;e;j Gyik> Mo;e;j Njly;> ey;y rpe;jidj; jpwd;> tpj;jpahrkhd nrayhw;Wk; tNtfk; vd;gtw;NwhL ahiuAk; gpd;gw;wp Nghy.. nra;jiyj; jtpu;j;J kw;wtu;fSf;F ,izahf cq;fisAk; jau;nra;J ,j;JiwfSf;Fs; EioaNtz;Lk;. ntWkNd Fuy;tsj;ij itj;Jf;nfhz;L thndhypapy; gpufhrpf;f KbahJ. mNjNghy fz;lijnay;yhk; vOJtJk; ,yf;fpak; MfhJ. vdNt> cq;fsJ Jiwf;fhd vy;yhj; jFjpfisAk; ngw;Wf; nfhz;L mj;Jiwf;Fs; gpuNtrpAq;fs;. mg;NghJjhd; ePq;fs; vjpu;ghu;f;Fk; ,lk; cq;fSf;F epr;rakha; fpilf;Fk;.



சூரியன் எவ்,எம் அறிவிப்பாளர் வர்ஷி வைத்தியலிங்கம் அறிவிப்பாளர்- நேர்காணல்


 மக்களின் இரசனைகளை கட்டிப் போடும் ஊடகங்களுக்குள் இன்று நமது நவீன ஊடகங்கள்தான் அதிகம் தாக்கம் செலுத்தி வருகின்றன. எம்மவர்களின் பொழுதுகளை இப்போது வானொலி தொலைக் காட்சிகள்தான் அதிகம் ஆக்கிரமித்துள்ளன என்பது கண்கூடு. இந்தவகையில், மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும் , தற்போதுள்ள வானொலி ஒலிபரப்பாளர்களில் அழகான குரலுக்கு சொந்தக்காரருமான வர்ஷி வைத்தியலிங்கத்தை  மித்திரன் நேர்காணலுக்காய்   சந்தித்தோம். அவரின் அனுபவங்களும் சுவாரஸ்யமான பதிவுகளும் இனி உங்களுக்காகவும்...
1 )உங்களுடைய  ஊடகத்துறைக்கான ஆரம்பகாலம்  எப்படி தொடங்கியது? 
  நான் பிறந்தது கொழும்பில்  என்றாலும், வளர்ந்தது அழகிய குளிர்மையான பிரதேசமான பொகவந்தலாவை. எனது குடும்பம்  அழகான  சின்னக் குடும்பம்.  அப்பா வைத்திலிங்கம் (வர்த்தகர்) அம்மா தனலக்ஸ்மி (குடும்ப நிர்வாகி) என்னை சமூகத்திற்கு அடையாளம் காட்டி இன்றுவரை என் வளர்ச்சிக்கு காரணமாய் இருப்பவர் என்னை பெறா அன்னை  செல்வி சரோஜா (பிரதி அதிபர் டின்சின் தமிழ் மகா வித்தியாலயம் )
 என்னுடைய ஆரம்ப கல்வியை ஹோலிரோசரி தமிழ் மகா வித்தியாலயம்,சென் மேரிஸ்  கல்லூரி  மற்றும் உயர்தரத்தை ஹட்டன் ஹய் லான்ஸ் கல்லூரியிலும் கற்றேன் .
சின்ன வயசிலிருந்து ஊடகம் மீதும்  கலை மீதும் ஆர்வம் அதிகம். பள்ளிப் பருவத்தை நிறைவு செய்துவிட்டு ஊடகவியல் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்தேன். . பிரபல இயக்குனர்  திரு பராக்கிரம நெரிஎல்ல அவர்களின் மக்கள் களரி நாடக பயிற்சிப்  பட்டறையில்  இணைந்து பல்வேறு பட்ட பயிற்சிகளையும் பெரும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அந்த அடிப்படைகளை என்னுடைய ஊடகத்துறைக்கான நுழைவுத் தகுதியாகக் கொண்டு ஆரம்பித்தது இந்த ஒலிபரப்பாளினி வாழ்க்கை. 

2 )வானொலித்துறையில் உங்களின் வருகை எப்படி அமைந்தது? 
    என்னை உருவாக்கி ஊக்குவித்து இப்போது நான் இருக்கும் இந்த நிலைக்குக் காரணமானவர்கள்  என் பெற்றோர்கள். அடுத்து எனக்கு வழிகாட்டியவர் சிறிய அன்னை செல்வி சரோஜா, மற்றும் எனக்கு இந்ததுறையில் வழிகாட்டியாக இருந்தவர் என் அன்பான அண்ணா அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா .  நான் இந்ததுறைக்கு வந்தது எதிர் பாராத சமயத்தில் கிடைத்த வரம் என்று சொல்லலாம்.  சூரியன் கலையகத்திற்கு  ஒரு நாடகத்திற்கான  குரல் பதிவிற்காக அண்ணா அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பாவுடன்   சென்றிருந்தேன்.  அதுதான் என் முதல் வானொலி பிரவேசம் ! அப்போது என் குரல் பிடித்திருந்ததால் நான் அறிவிப்பாளர்  நேர்முக தேர்வுக்காக அழைக்கப்பட்டேன்.  அந்த தேர்வில் தெரிவு செய்யப்பட்டு சூரியன் பண்பலைக்  குடும்பத்தில்  இணைந்து கொண்டேன். எப்போதுமே எனக்கு நல்ல ஆரம்பத்தை வழங்கிய பெருமை அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா அண்ணாவுக்கும்  சூரியனுக்குமே!
3 .இப்போது உங்களின் அறிவிப்பாளினி வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக உங்களுக்கு உதவுகின்றவர்கள்?  

இப்போது, சூரியன் வானொலியின் ஆலோசகர் திரு சி.நடராஜசிவம்  அவர்கள் நிறைய பயிற்சிகளையும்  ஆலோசனைகளையும் வழங்குவதுடன் இன்றுவரை என் நிகழ்சிகளை கேட்டு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்துகிறார்.  அதேபோல சூரியன் வானொலியின் தலைமை பொறுப்பதிகாரி திரு நவநீதன்  அவர்களும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் நுணுக்கங்கள் மற்றும் தொழில்நுட்பம்  சார்ந்த விடயங்களையும் கற்றுத்தந்து இன்றுவரை ஊகுவித்து   பக்க பலமாக இருந்து வருகிறார்.  அதுமட்டும் அல்லாது என்னுடைய சகல விடயங்களிலும் பக்க பலமாக என் சக அறிவிப்பாளர்கள் என்னுடன் இருக்கின்றார்கள்.இவர்களுடன்  மிக பெரிய பலம்  சூரியனின் நேயர்கள்.  இவர்கள் அனைவருமே என் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானவர்கள்  இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் அனைவருடைய வழிகாட்டலும் ஊக்குவிப்பும் தான் எனக்கான இந்த ஊடகப் பாதைக்கு வழிகாட்டுகின்றன. 

4) ஆரம்பத்தில் வானொலித் துறையில் உங்களுக்கு எப்படியான அனுபவங்கள் ஏற்பட்டன?

நான் வானொலிக்கு நுழைய முன்னமே, என்னை பல பயிற்சிகள் மூலம் தயார்ப்படுத்தியிருந்தேன். அதனால்,  என்னுடைய ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை மிகவும் சந்தோஷமான அனுபவமாகவே அமைந்துள்ளது.  நிறைய விடயங்களை இன்றுவரை கற்றுகொள்ளும் ஒரு களமாக சூரியன்  அமைந்துள்ளது.
இந்த ஊடகத்துறை ஒவ்வொரு நாளும் புதிதான விடயங்கள், புதிய அனுபவங்கள், பல புதிய   நண்பர்கள் என அத்தனையும் வித்தியாசமான   ஒரு அனுபவத்தை பெறகூடிய ஒரு இடம் இது. ஆகவே இங்கு கஷ்டங்கள் அனுபவங்களாக அமைந்து நம்மை புடம் போடும் ஒரு இடமாகவே அமைந்துள்ளது. 


   5 ) ஒரு  ஒலிபரப்பாளருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என்று நீங்கள் கருதுகின்றவை?
      இந்தத் துறைக்குள் நுழைவதற்கு முதலில் தமிழிலும் அதேபோன்று ஏனைய மொழிகளிலும் நல்ல புலமை இருக்க வேண்டும். இன்னும் விசேடமாக சுவாரஸ்யமாக நகர்த்தும் கருத்தாழம் மிக்க குரல்வளம், மொழியை லாவகமாக கையாளும் திறன் என்பன கட்டாயமாக இருக்க வேண்டும். அத்தோடு  விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ,பணிவு    என்பன இருந்தால்த் தான் நாங்கள்  இந்த தளத்தில் தொடர்ந்து   பயணிக்க முடியும். இவைதான் நமக்கான அடையாளங்கள். 

6 )இன்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இப்போதுள்ள தொலைக்காட்சிகள் மற்றும்  வானொலிகளில் சிலர் தமிழ் புலமை இல்லாமல் ஆழ்ந்த அறிவு இல்லாமல் உச்சரிப்புப் பிழைகளோடு நிகழ்ச்சிகளையும், செய்தி அறிக்கைகளையும் செய்வதாக! இது எந்தளவுக்கு உண்மை என நீங்கள் கருதுகிறீர்கள்?
வானொலிகளை மட்டும் குற்றம் சாட்டுவது ஏற்றுகொள்ள முடியாத ஒரு விடயமாகும். ஒருவரின் கவனயீனம் காரணமாக ஒட்டுமொத்த நிறுவனத்தையும் குறை சொல்ல முடியாது.  இருப்பினும், ஒரு தனி நபர் தன் பிழைகளை திருத்திக் கொள்ளும்போது  இந்த குற்றச்சாட்டிற்கான தீர்வு கிடைக்கும் என்ன நான் நம்புகிறேன்.  மீண்டும் சொல்கிறேன். தமது துறைசார்ந்த பூரணமான அறிவோடு இத்துறைக்குள் நுழைய வேண்டும். எம்மோடு இருப்பவர்களின் தகுதிக்கு தக்க வகையில் நம்ம நாளுக்குநாள் தயார் செய்ய வேண்டும். 
7 ) இப்போது புதிய பல தனியார் வானொலிகள் முளைத்துக் கொண்டு வருகின்றன. அவற்றின் வரவால் எத்தகையதான நிலைமைகள் நமது இப்போதைய சூழலில் ஏற்ப்படலாம்?
அதிகமானோர் வீட்டில் இருக்கும் நேரம் மட்டும்தான் தொலைகாட்சியை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.இப்பொழுது ஏராளமானவர்கள்  இணையத்திலும் தங்கள் தொலைபேசிகளிலும் வாகனங்களிலும் வானொலியை கேட்கும் சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது அகவே வானொலிக்கான வரவேற்பு என்றும் குறையாது என நினைக்கின்றேன். இந்த நிலையில் தமக்குப் பிடித்த வானோலியைத்தான் நேயர்கள் கேட்பார்கள். அத்தோடு,மக்களின் 
இராசனையரிந்து நிகழ்ச்சிகள் படைக்கப்படும் போது அது வெற்றியடையும்.
எத்தனை வானொலிகள் வந்தாலும் அவை சுமக்கின்ற உள்ளீடுகளால் தான் அவை தமது இலக்கை அடைகின்றன. எனவே, பல வானொலிகளின் வரவு, ஊடகங்களின் ஆரம்பம் ஆரோக்கியமானதே!

10 ) இறுதியாய்,  இனிமேல் ஒலிபரப்புத் துறைக்கும் பிரவேசிக்கக் காத்திருக்கும் இளையவர்களுக்கு ஒரு மூத்த ஒலிபரப்பாளர் என்கின்ற வகையில் உங்களது  ஆலோசனை என்ன? 
மூத்த ஒலிபரப்பாளர்   என்பதைவிட சற்று அனுபவம் பெற்றவர் என்றவகையில் ஆர்வமாக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு என்னால் கூற முடிந்தது.     உங்களுக்கான இடம் நிச்சயமாக உள்ளது. அந்த களம் கிடைக்கும்வரை முயற்சிசெய்யுங்கள். நம்பிக்கையோடு தனிப்பட்ட ரீதியில் உங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்தத் துறைகளில் நீங்கள் நீடித்து நிலைத்து வெற்றியடைய முடியும்.

வெள்ளி, 22 ஜூன், 2012

முல்லைத்தீவில் பண்பாட்டைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் குருந்தூர் மலை. ஆராச்சியல்ல! அடையாளப்படுத்தல்!



...........................................................................................................................
பண்டார வன்னியன் மன்னனின் வீர புகழ் பரவிக் கிடக்கும் வன்னிமண்ணில் பல வரலாற்றுத் தடயங்களும், முன்னோர்களின் வாழ்வியல் கோலங்களைப் பேசும் வாழ்விடங்களும் இன்றும் அழிவின் விளிம்பிளிருந்தாலும் அடையாளமாய் காணப்படுகின்றன. இன்று நவீனத்துக்குள் நம்மவர்கள் நகர்ந்து கொண்டிருப்பதால், இனத்தோடு ஒட்டியிருந்த கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் என்பன புதைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களிலேயே அவை இருந்த தடயமே இல்லாமல் மறைந்து போகக்கூடும். இத்தகைய நம்மினத்தின் அடையாளங்களை இனி வரப்போகும் சந்ததியும் தெரிந்து கொள்ள வேண்டுமெனும் நோக்கோடு, நாங்கள் பயணமாகத் தெரிவு செய்த இடம்தான் முல்லைத்தீவிலிருந்து வடக்காக பதினேழு கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள குருந்தூர் மலை. 
இது தமிழ் மக்களுடைய பாரம்பரியங்களை கூறுகின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கவொரு இடமாக உள்ளது. ஆரம்பத்தில் தமிழர்களின் ஆதி குடிகள் எனப்படுகின்ற இயக்கர்களும், நாகர்களும் வாழ்த்துள்ள இடம். அவர்களின் அடையாளச் சின்னமாய் இன்றும் குருந்தூர்மலை அடிவாரத்தில் நாக தெய்வ வழிபாடு காணப்படுகின்றது. 
இப்பயணத்தில் என்னோடு இன்னும் மூன்று தோழர்கள் எனக்குதவியாக கரம் கோர்த்துக் கொள்ள, குமுளமுனை என்னும் கிராமத்தைக் கடந்து ஆறுமுகத்தாங்குளம் என்ற சிறுகிராமத்தையும் கடந்தோம். பொட்டல் காடுகளும், பசுமை படர்ந்த சிறு பற்றைகளுமாக  அந்தத் தேசமே நம்மவர்கள் வாழ்வியலின் வரலாற்றை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இரு கிராமங்களைக் கடந்து வந்ததும் சேறு சகதிகள் நிறைந்த ஒற்றையடி மணல் பாதையொன்று குருந்தூர்மலைக்கு விரைவதை  எங்களோடு வந்திருந்த குமுளமுணைப் பிரதேசவாசியொருவர் கண்ணுற்றுக் கூற, எமது பயணம் அந்த வழி தொடங்கிற்று. 
















ஊரிலிருந்து சுமார் ஆறு மைல்கள் தூரத்தில் நாம் தேடிப்போன குருந்தூர் மலையின் அடிவாரத்தை அடைந்ததும் தான் எமக்குள் எதோ ஒருவித திருப்தி புகுந்து கொண்டது. மக்கள் யாரும் அங்கில்லை. அவர்களின் விவசாய நிலங்கள் வெளிகளை வெறுமையைச் சுமந்திருந்தன. ஒருசில வயல்கள் மட்டும் ஆங்காங்கே பச்சை ஆடைகளாய் நெற் கதிர்களை  நீட்டிக் கொண்டிருந்தன. உச்சியில் சூரியன் சுட்டுக் கொண்டிருந்தான். பொருட்படுத்தாத பயணம். எங்கள் இலக்கு மலையின் உச்சியிலுள்ள பண்டாரவன்னியன் மறைந்திருந்தான் என்று சொல்லப்படுகின்ற மலைக் கோட்டையில் சிதிலங்களைக் காண வேண்டுமென்பதே! கொழுவி இழுக்கும் முட் புதர்கள் எங்களைப் பதம் பார்க்க, ஒற்றையடிப் பாதையாக இருந்த இடம் சுருங்கி, ஒரு தடம் பதிக்குமளவாய் மாறிப் போனது. 
மெது மெதுவாய் நகரத் தொடங்கினோம் நால்வரும்! பாதை உயரத் தொடங்கியது. காடுகள் அடர்த்தியாகின. இல்லை குலைகள் நிறைந்து கிடக்க, எங்களுக்கு வழிகாட்டியாய் வந்தவர் முன்னே நடந்தார். அனுபவம் அவருக்குள் நிறையவே இருந்திருக்க வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை சொல்லிக் கொண்டே வந்தார். 
அண்மைக் காலங்களில் யாருமே அப்பகுதிக்குள் பிரவேசித்திருக்கவில்லை என்பதைப் பார்க்கும் போதே புரிந்து கொண்டோம். மயான அமைதியில் காடே உறைந்திருக்கிறது. நாங்களும் உச்சியைத் தேடி இயலாமைகளை தூரப் போட்டுவிட்டு நடந்து கொண்டேயிருக்கிறோம். புலிகளுக்கும் இராணுவத்துக்கும் போர் மூண்டிருந்த காலப்பகுதியில் கூட, இந்தப் பிரதேசம் அவ்வளவாக மக்களால் பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை. ஏனெனில், இது போருக்குள்ளும் இரு தரப்பும் பயன்படுத்த அஞ்சிய சூனியப் பிரதேசமாய் இருந்துள்ளது. மக்களும் மலையடிவாரத்தை அண்டிய பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும், இப்பகுதிக்குள் அநாவசியமாக நுழைய முற் படவில்லை. வேர்களும் கொடி செடிகளும் நிறைந்திருக்கும் பாதையால், நகர்ந்த எங்கள் பயணம் மலை உச்சியைத் தொட்டு விட்டது. கடல் மட்டத்திருந்து 150 மீற்றர்கள் உயரத்தில் நின்று கொண்டிருந்தோம். கட்டடச் சிதைவுகளும், யாரோ வாழ்ந்துள்ளார்கள் என்று சொல்லுமளவுக்கு இடிபாட்டு துகள்களும் அவ்விடத்தில் நிறைந்து கிடந்தன. நீல நீளமான தூண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமது இருப்பை சொல்வதை நிமிர்ந்து கொண்டிருந்தன. அவ்விடங்களை புகைப்படங்கலாக்கிக் கொண்டதோடு, மேற்கொண்டும் ஏதாவது தடயங்கள் அகப்படுகின்றதா என்று தேடினோம். நாம் இருப்பதற்கு பின்புற மலைப் பக்கமாய்  ஒரு சுரங்கம் அமைந்திருப்பதாகவும் , அதற்க்குச் செல்வது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத விடயமென்றும் எம்மோடு வந்திருந்தவர் கூற, எமக்கும் ஆர்வம் தா. இருந்தாலும் பாதுகாப்பில்லை என தெரிந்துகொண்டு நுழைவது ஆபத்தை அமைந்துவிடலாம். ஏனெனில், அது பெரிய விலங்குகள் சீவிக்கும் காடாக இருந்தது. அத்தோடு, தோழி ஒருத்தியும் எங்களோடு வந்திருந்தாள். கிடைத்த தகவல்களைக் குறித்துக் கொண்டு மீண்டும், எங்களது பயணம் மலையிலிருந்து இறங்கத் தொடங்கியது. 

அடுத்து இப்பிரதேசங்கள் தொடர்பான தகவல்களைத் தரக் கூடியவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற நோக்கோடு குமுளமுனைக் கிராமத்துக்குள் நுழைந்தோம். இயற்கை கொட்டிக் கிடக்கும் கிராமம் போருக்குப் பின்னர், கொஞ்சம் மாறிப் போயிருந்தது. பலரிடம் குருந்தூர்மலை தொடர்பான தகவல்கள், அங்கு வாழ்ந்த மூதாதையர்கள், வழிபாட்டு முறைகள், கலை கலாச்சாரப் பின்னணிகள் என்பவற்றைக் கேட்டோம். சிலருக்கு சில விடயங்கள் தெரிந்திருந்தன. சொன்னார்கள்; ஆனாலும், எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் விதமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. விசாரித்துக் கொண்டே சென்றபோது, ஒருவரை நீட்டியே பலரும் கைகாட்டினார்கள். அவரிடம் நிறையத் தகவல்கள் உங்களுக்குக் கிடைக்குமென கூறி, குறித்த நபரின் வீட்டு அடையாளத்தையும் தந்தார்கள். நுழைந்து விட்டோம் அங்கும். 
முதுமையை சுமந்துகொண்டிருந்தாலும் முகத்திலொரு உற்சாகம், தெளிவு! வரவேற்றார், எங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு நமக்கான உரையாடலை ஆரம்பித்தோம்.
அவர் தான் எமது ஆய்வுக்குரிய வகையில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். 
கனகர் கந்தசாமி - குமுளமுனை.
என்னுடைய தந்தையார் காலத்துக்கு முனமிருந்தே தமிழ் மக்கள் வால்துவந்த பகுதிகள் தான் நீங்கள் சொல்லும் குருந்தூர் மலையும், அதனை அண்டிய ஆறுமுகத்தாங்குளம் மற்றும் தண்ணிமுறிப்பு ஆகிய இடங்களும்! அங்கு நமது ஆதி குடிகளான இயக்கர்களும் நாகர்களும் தான் ஆரம்ப காலங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்க்கான சான்றுகளும் உள்ளன. நாக தெய்வ வழிபாடு, ஐயனார் தெய்வம் என்பன இன்றும் இப்பகுதிக்குள் நுழையும் மக்களால் காணக்கூடியதாகவும் வழிபடத் தக்கதாகவும் உள்ளது. அத்தோடு, அவர்களின் பின்னர் என் தாத்தா காலத்தில் எமது முந்தைய தலைமுறையினர் வாழ்ந்தது எனக்குத் தெரியும். அப்போதுகளில் நமது பெண்கள் சட்டையில்லாமல் தான் சேலை அணிவார்கள். அது தான் அப்போதைய பாரம்பரிய பழக்க வழக்கமாக இருந்தது. 
பாசிகளிலும் மணிகளிலும் தான் அவர்களின் ஆபரணங்கள் காணப்படும். கூத்துக்கள், பல்லு என்பவற்றை அப்போதைய மக்கள் தமது திருவிழாக்களில் மற்றும் மதச் சடங்குகளில் பாடுவதும் வழக்கமாகவிருந்துள்ளது. நாக வழிபாடு, வைரவர், பிள்ளையார் போன்ற தெய்வங்கள் வழிபடப்பட்டன. விவசாயம், சேனைப் பயிர்ச் செய்கைகள் தான் அவர்களது பிரதான ஜீவனோபாயத் தொழிலாகவும், தேன் எடுப்பது , வேட்டையாடுதல் என்பன காலம் பார்த்துச் செய்யும் உப தொழிலாகவும் இருந்துள்ளன. ஏன்? நம்மவர்களும் இப்போது அப்படியான முறையில் தான் தமது வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து வருவதை காணலாம். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், முறிப்பு போன்ற பிரதேச மக்கள் இப்போது அந்த முறையில் தான் வாழ்கிறார்கள். இதனை இப்போதுகூட காண முடிகிறது. 
இந்நிலை சில இடங்களில் தென்பட்டாலும் ,எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் படிப்படியாக எங்களது தலைமுறையோடு நம் மூதாதையர்கள் வாழ்ந்து வந்து கொண்டிருந்த கலாசாரம் பண்பாட்டு நெறிமுறைகள் அழிந்து விட்டன என்றே சொல்ல வேண்டியுள்ளது. ஏனெனில், எம்மவர்கள் பலர் அடுத்தவரின் போக்கிலே வாழ தலைப்பட்டு விட்டார்கள். பண்பாடு, மரபுரிமை  என்பதெல்லாம் இப்போது இல்லை. 
இவ்வாறு அந்த காலப்பகுதி மக்கள் வாழ்ந்த முறைகளை விளக்கியவரிடம், 
அவர்களின் தசாப்தம் நிறைவடைந்து உங்கள் தலைமுறை தலையெடுக்கத் தொடங்கியவுடன், அந்தப் பகுதியில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்களே  அது தொடர்பாக சொல்லுங்கள் என்றோம்? 
ஆமாம்! பரம்பரைகளாய் அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த எங்களுக்கு அரசினால் குருந்தூர்மலையை அண்டிய பகுதிகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர்  என்ற விதமாய் காணிகள் வழங்கப்பட்டன. நாங்களும் அக்காணிகளை எமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தோம். பின்னர் சில காலத்தின் பின்பு, மணலாறு, அந்தப் பக்கங்களில் உள்ள டென் பார்ம், டொலர் பார்ம், போன்ற இடங்களிலுள்ள பௌத்த பிக்குகள் சிலர் வந்து குருந்தூர்மலை எமக்கு உரித்தான நிலம். அதனை நான் பௌத்த பூமியாக்கப் போகிறோம் என்று கட்டாயப்படுத்தி, மலையின் இடையில் சிலை வைத்து தாமும் தங்கி வழிபடத் தொடங்கினர். நாளாந்தம் இதனால் பிரச்சினைகள் கிளம்பத் தொடங்கின. எங்களின் விவசாயப்பகுதியாகவிருந்த அந்நிலங்களில் தொழில் செய்யும் எம்மவர்களை அவர்கள் சீண்டத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் இவர்களோடு போராட முடியாத நாங்கல் அரசாங்க அதிபர் பணிமனையில் முறையிட்டோம். அங்கு அரசு, இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளியிடும் நோக்கோடு, யாருக்கும்  அப்பகுதி உரியதல்ல என்று தமது கவனத்துக்குள் உள்ள பகுதியாக எல்லையிட்டனர். 
இன்று வரை அப்பகுதிக்குள் மக்கள் கூட மீள் குடியேற்றப் படவில்லை. காணிகளைக் கொளுத்தி துப்புரவு செய்வதர்க்குக் கூட அரச அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி யாரும் காணிகள் குடியேற முடியாது. இப்போதும் அப்பகுதிகளுக்குப் போகும் நாங்கள் ஏக்கத்தோடு எமது காணிகளை பார்ப்பதோடு முடிந்து விடுகிறது என்றார். 
இவ்வாறு தமது பாரம்பரியங்களையும், பண்பாட்டுக் கலை கலாசாரத்தையும் இழந்து போன வலி அவர் குரலில் அடிக்கடி தென்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. இத்தகைய குருன்தூர்மலை, இன்னும் வெளிவராத பல உண்மைகளையும் தன்வசம் தரித்துள்ளது என்கிறார்கள் கிராம வாசிகள். 
அக்காலத்து அரசர்களின் ராணிகள் குளிப்பதற்கு கட்டப்பட்ட தடாகங்களும், சுரங்க வழிப் பாதைகளும், மலையின் மறு பக்கத்தில் இருப்பதாகவும் பாதுகாப்பு இல்லையென்பதால், தாம் அதனை மேலும் அலசிப் பார்க்கவில்லைஎனவும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த துரைசிங்கம் தெரிவித்தார். 

உண்மைதான்! தமிழினம் முதன்மைக் குடிகளாய் வாழ்ந்த கலை கலாசாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் நம்மவர்களால் மறக்கப்பட்டும் மதிக்கப்படாமலும் போய்க்கொண்டிருக்கின்றன. அத்தோடு, இருக்கும் தனித்துவங்களும் அடையாளங்களும் அளிக்கப்படுகின்றன. இதனைக் கவனத்திலெடுத்து அது தொடர்பான ஒரு அடுத்த தலைமுறைக்கான அவனப் படுத்தும் செயற்பாட்டை நம்மவர்கள் முன்னெடுப்பதாகவும் தெரியவில்லை. இத்தனைக்கும் எம்மவர்கள்தான் பொறுப்பாளிகள். நமது மரபுரிமைகளையும் பாரம்பரியத்தையும் நாமே சுமக்க வேண்டியவர்கள் என்பதையும் அதனைப் பாதுக்காப்பதும் நமது கடமை என்பதையும் ஒவ்வொரு தமிழ் உள்ளமும் மறத்தலாகாது. 

புதன், 20 ஜூன், 2012

கிழக்கின் இலக்கியத்தளத்தில் கவிஞன் முக்கியமாகிறான்.


இலங்கையின் கிழக்கே இருந்து பல இலக்கிய படைப்புக்களும் இதழ்களும் வெளிவந்து கொண்டிருந்தாலும், கவிதைகளுக்கு முக்கியத்துவமளித்து சதாசிவம் மதனை ஆசிரியராகக் கொண்டு வேநிவருகிற காலாண்டு கலை இலக்கிய சஞ்சிகைதான் கவிஞன். 
பல போராட்டங்களுக்கு மத்தியில் முகிழ்ந்து நிற்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு முளைவிட்டுள்ள கவிஞன் தொடர்பாக பேசாமல் இருக்க முடியவில்லை. 
கவிஞர் அஸ்மின் அட்டைப்படத்தை அலங்கரிக்க, கவிஞன் உள்ளே நம்மை அவசரமாக இழுத்துச் செல்கிறான்.
கவிதையின் ஆழம் தேடி என்று ஆசிரியர், கவிதைகள் தொடர்பான நம்மவர்களின் இப்போதைய பார்வை பற்றி  கிலாகிக்கும் ஆசிரியர் பக்கம் இப்போதைய நிகழ்கால முரண்களைப் பேசுகின்றது. அடுத்து, சாதனை இளைஞன் என்னும் மகுடத்தில் கவிஞர் அஸ்மின் தன்னுடைய இலக்கிய வாழ்வு பற்றி பதிவு செய்துள்ள நேர்காணல், அந்த படைப்பாளியின் பாடுகளோடு அவரின் பல்வேறு பட்ட வாழ்க்கைக் குறிப்புக்களைப் பேசுகிறது. 
தொடர்ந்து கவிதைகளின் ஊர்வலம் ஆரம்பமாகிறது. மடுல்சீமை சதாசிவம் வடித்துள்ள மீன்பாடும் தென்னாடு கவிதை ஆரம்பித்து வைக்க, " ஆண்களின் பார்வைக்கும் பெண்களின் மனதிற்க்கும்.. கவிதையை மட்டக்களப்பு தனுசனும், பெரிய கல்லாறு காண்டீபனின் நீ இன்னும் அழகாய்த் தான் இருக்கிறாய், கவிமணி நீலா பாலனின் நிழலாய் இரு, சாகாமம் குறிஞ்சி வாணனின் உள்ளத்திலேன்று நல்லதே தோன்றும், புது விதமாக முகம் தெரிய கவிஞர்கள் கிறுக்கிற மேசைக் கிறுக்கல்கள், வேதமூர்த்தி எழுதும் நிறைமகள் என்னும் கவி வழியான   கண்ணகி தொடரும் ,  களுதாவளை நிலா தமிழன் எழுதிய பொக்கணம் கேட்ட குரங்குக்கு வாக்குப் போட்டால், மதனின் பதறித் துடிக்கும் இதயம், ஆரையூர்த் தாமரையின் மலைஎனவே நான் வருவேன், ராஜாமுகம்மது எழுதிய உலகம் அழிகிறது, கதிரவனின் அவருக்கும் தெரியாது, படித்ததில் பிடித்த கவிதையாக லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி  எழுதிய நீயும் நானும் என்னும் கவிதைகளும் இடம்பிடித்துள்ளன.
 கவிஞன் கவிதைகளுக்கு மட்டும் சொந்தக் காரன் இல்லை என்பதை சுமந்து வந்துள்ள உள்ளீடுகள் சுட்டிக்காட்டி கட்டியங் கூறுகின்றன. கவிநயம் காண்போம் என்னும் தலைப்பில், ஒரு இலக்கியப் பத்தியும், ஹைக்கூ கோனார் என்று முருகேஷ் தமிழ் நாட்டிலிருந்து எழுதியுள்ள ஹைக்கூ கவிதைகள் பற்றிய பார்வையும், புதிய பறவை எழுதும் கவிதை பற்றிய சில அவதானிப்புக்கள் கவிதைக்காரர்களுக்கு பயன்தரும் பத்தியாக அமைந்துள்ளது. 
கவிப் பிரியர்களை வளர்த்து விடும் நோக்கிலே, வலைப்பூங்கா பகுதியும் அழகாய் கவிஞனில் விரிந்துள்ளன. 
நூலங்காடி என்னும் பகுதிக்குள் பல இலக்கிய இதழ்கள், சஞ்சிகைகள் தொடர்பான அறிமுகம் வெளியிடப்பட்டுள்ளதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. 
கவிதைகளுக்கும் கவிதை படிப்பவர்களுக்கும் இலக்கிய வாதிகளுக்கும் மிகப் பயனுள்ள இதழாக கவிஞன் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தரமான வரவாக ஈழத்து இலக்கிய உலகில் அறிமுகமாகியுள்ள இந்த இதழ் , இன்னும் பல தளங்களில் பயனுள்ள இதழாக பரவ வேண்டுமென்று வாழ்த்துகின்றோம். 


 



படைப்பாளி தீபச் செல்வன் நேர்காணல்..


வன்னி மண்ணிலிருந்து குறிப்பிடத்தக்க படைப்பாளிகளே இப்போது, ஈழத்து இலக்கிய உலகில் தடம் பதித்துள்ளார்கள். பலர் எழுதினாலும் சிலரே, பேசப்படுகிறார்கள். இந்த வகையில், சத்தமில்லாமல் எட்டு நூல்களை பிரசவித்தவாறு இன்னுமின்னும் இலக்கியத்திற்கும் ஊடகத்திட்க்கும் தன்னுடைய பணிசெய்வதர்க்காய், தொடர்ந்தும் இந்தத் துறைகளைக் கற்று வருகிறார்.தற்பொழுது சென்னைப் பல்கைலகழத்தில் இதழியல் மற்றும் தொடர்பியலில் முதுகலை படித்து வரும் படைப்பாளி தீபச் செல்வன் விடுமுறையில் இலங்கை வந்திருந்தபோது, அவரை நேர்கண்டவை உங்களுக்காகவும்...


1 . உங்களைப் பற்றி?

நான் கிளிநொச்சியை பூர்வீகமாகக் கொண்டவன். சிறிய வயதிலிருந்தே யுத்தம் காரணமாக பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கிறேன். குழந்தைப் பருவகால இடப்பெயர்சுவுகளும் மரணங்களும் போர்நடவடிக்கைகளும் கடுமையாக பாதித்திருக்கின்றன. குழந்தைப் பருவ பாதிப்பு என்பது மீண்டும் மீண்டும் என்னை ஈழக் குழந்தைகளின் உலகத்தை நோக்கி இழுத்துச் செல்லுகிறது. கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் இடம்பெயர்ந்த காலத்தில் பல பள்ளிகளிலும் படித்திருக்கிறேன். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு பட்டம் பெற்றேன். கடந்த மூன்றாண்டுகளாக சுயாதீனப் பத்திரிகையாளராக இயங்கி வருகிறேன். தற்பொழுது சென்னைப் பல்கைலக்கழத்தில் இதழியல் மற்றும் தொடர்பியலில் முதுகலை படித்து வருகிறேன். ஏங்களைப் பற்றிய அடையாளங்களை இழந்துகொண்டிருக்கும் காலம் இது. அதனால் என்னை ஆக்கிரமிக்கப்பட்ட ஈழதேசத்தின் பிரஜையாகவே அடையாளப்படுத்த விரும்புகிறேன். 

2 .நீங்கள் பல தளங்களில் படைப்புக்களை எழுதுகிறீர்கள். இந்த வகையில், உங்களுக்கு கவிதை மிகவும் பிடித்தமானது என்பதை பல தடவைகளில் நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். எனவே, கவிதை உங்களுக்கு பிடித்துப் போக விசேமான காரணங்கள் ஏதாவது?

இலக்கியத்தில் கவிதையை அரசி என்கிறோம். கவிதையின் வடிவமும் உள்ளடக்கமும் வெளிப்பாட்டுமுறையும் மிகவும் தாக்கத்தை உருவாக்கக்கூடியது. எனக்கு பிடித்த பல நாவல்களும் சிறுகதைகளும்கூட உள்ளன. ஏல்லா இலக்கிய வடிவங்களின் மூலமும் நாம் சொல்ல விரும்பும் செய்திகளை சொல்ல முடியும். கவிதைதான் எனக்கு பிடித்த இலக்கிய வடிவம் என்று நான் ஒரு பொழுதும் சொல்லவில்லையே. கவிதைத்தளத்தில் அதிகம் நெருக்கமாக இயங்குகிறேன். சிறிய வடிவத்தின் மூலம் பெரும் அழகியலை பெரும் அரசியலை பெரும் உள்ளடக்கத்தை மிக தாக்கம் தரும் முறையில் கவிதையின் சொல்லுவது எனக்கு அந்த வடிவத்தின்மீது ஈடுபாட்டை அதிகப்படுத்தியிருக்கலாம். தவிர பெருநிலத்தின் கதைகள் என்ற தொகுப்பில் உண்மைக்கதைகளும் எழுதியுள்ளேன். தற்பொழுது ஒரு நாவலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

3 .
 இலக்கியத்தில் நீங்கள் நுழைந்துகொள்ள வழி கோலியது? 

இயல்பிலேயே எனக்கு கவிதைமீது ஈடுபாடு இருந்தது. ஏழாம் எட்டாம் வகுப்பு படித்த காலத்திலேயே கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். எனது பாடக் கொப்பிகளுடன் கவிதை எழுதும் ஒரு கொப்பியும் என்னிடம் இருந்தது. ஊயர்தரவகுப்பு படித்த காலத்தில் பாடசாலையால் கவிதைப் போட்டிகளுக்குச் செல்லுவேன். பின்னர் உயர்தரம் முடித்த பொழுதே எழுதும் கவிதைகளை பிரசுரிக்கும் ஈடுபாடு ஏற்பட்டது. ஏங்கள் நாட்டில் எங்கள் இனத்திற்கு எதிரான போரும் இன அழிப்பு நடவடிக்கைகளும் எனது எழுத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது என்று நினைக்கிறேன். இந்தப் பாதிப்புக்கள் கவிதையை வெறும் இலக்கிய வடிவமாக கையாள்வதைவிடவும் ஆயுதமாகக் கையாளத் தூண்டியது. 




4 .ஈழத்துப் படைப்புக்களில் இப்போதுள்ள இளையவர்களுக்கு யதார்த்தம் பற்றி சொல்லிக் கொடுக்கும்படியாக உங்களது எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. இந்நிலையில், இப்போதுள்ளவர்கள் கவிதைகளில் சொற்களை அடுக்கி கற்பனைகளால் கவிதையை விற்பனை செய்வதாக ஒரு குறைபாடு உண்டு. இந்நிலை குறித்து உங்களது கருத்து? 

இலக்கியத்தின் வடிவம் தொடர்பில் பன்முகப்பட்ட விவாதங்கள் நடைபெறும் காலம் இது. குறிப்பாக வரையறைகளும் மரபுகளும் சார்ந்த விடயங்களிலிருந்து அப்பால்பட்டு இலக்கியவடிவ மாற்றங்கள் ஏற்படுகின்றன. எப்பொழுதுமே சமூகத்தை பாதிக்கத்தக்க நேர்த்தி மிகுந்த தன்மையே இலக்கியத்திற்கு அவசியமானது. நாம் சொற்களைப் பயன்படுத்தும் முறையிலேயே கவிதையின் சாத்தியம் தங்கியிருக்கிறது. கவிதையில் புதுக்கவிதை என்ற வடிவ மாற்றத்தின் பின்னர் கவிதை வடிவம் சார்ந்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. எது கவிதை என்று ஒவ்வொருவரிடமும் மாறுபட்ட கருத்து உண்டு. அது அவர்களின் அறிவு, அரசியல் சார்ந்து காணப்படுகிறது. கவிதைகள் மட்டுமல்ல எல்லா எழுத்துக்களும் தொகுப்புக்காளகவும் ஊடகங்களிலும் வரும் பொழுது வியாபாரப்பொருளாகிறது. எழுத்தும் அடிப்படையில் விற்பனைக்கானது. அது எந்தளவு வியாபாரத்தன்மை கொண்டது என்பது படைப்பை வியாபாரத்தை நோக்கி உருவாக்குவதில் தங்கியுள்ளது. உண்மையில் கவிதையில் உண்மையும் நேர்த்தியும் வடிவச் செழுமையும் எந்தளவு வருகிறது என்பதைப் பொறுத்தே கவிதை சாத்தியமாகிறது. 


4 .அநீதிகளுக்கு உட்படுத்தப்படுகின்ற மக்களின் குரலாய் உங்கள் படைப்புக்கள் வெளிவந்து சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்றுள்ளதை நாங்கள் நேரடியாகக் கண்டுள்ளோம். இந்த நிலையில், உங்களது இலக்கிய பணிக்கு ஊக்குவிக்கின்றவர்கள் என்று நீங்கள் கருதுகின்றவர்கள்? ஊடகங்கள்?

எழுத்துச் செயற்பாட்டை வெற்றியும் சாதனையுமாக என்னால் பார்க்க முடியவில்லை. நம்முடைய இனமும் நிலமும் இன்றுள்ள நிலையில் எழுத்தை நேர்மையாக பணியாகவே செய்ய வேண்டிருக்கிறது. புகழ் சம்பாதிப்பதற்கான வழியாக இல்லாமல் என்னுடைய குரல் உரத்துப் பேச வேண்டும் அநீதியை எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படைகள் மட்டுமே என்னிடமுள்ளன. சில ஊடகங்கள் என்னுடைய எழுத்துக்களை நிலமைகளைப் பொறுத்து கேட்டு வாங்கி பிரசுரிக்கின்றன. சில ஊடகங்களுக்கு நானே எழுதி அனுப்புவேன். நூன் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளராகவே இயங்குகிறேன். ஏன்னுடைய நோக்கம் என்னை வளர்ப்பதோ ஊடகங்களை வளர்ப்பதோ அல்ல. என்னுடைய இனத்தின் நிலiயை குறித்து எழுதுவதே. அதன் காரணமாக உலகின் பல்வேறு பாகங்களிலுருந்தும் ஊடக, எழுத்து நண்பர்களின் ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் நிறையவே உண்டு.

5 .உங்களது பல படைப்புக்களை இந்திய பதிப்பகங்கள் நூலாக வெளியிட்டுள்ளன. உங்கள் படைப்புக்களுக்கு அவையே தக்க சான்றுகள். இந்தவகையில், இலங்கையில் ஒரு படைப்பை வெளியிட பல தடைகள் நிலவுகின்றன. இது நீங்களும் படைப்பாளி என்கிற ரீதியில் பல அனுபவத்தைத் தந்திருக்கும். அவை பற்றி?

இந்திய பதிப்பகங்களின் வாயிலாக புத்தகத்தை வெளியிடுவது பற்றி நாட்டில் பெரிய குற்றச்சாட்டே இருக்கிறது. இந்தியாவில் புத்தகங்களை வெளியிடும் பலரும் நாட்டில் வெளியிட முடியாத புத்தகங்களையே வெளியிடுகின்றனர். உயிராபத்துக்களும் அறிவிக்கப்படாத தடைகளும் நிலவுகின்றன. எழுவதிலிருந்து இவைகள் தொடங்குகின்றன. பதிப்பிப்பது, வெளியிடுவது, விநயோகிப்பது என்று எதையுமே செய்ய முடியாத நிலமையையே இங்கு காணப்படுகிறது. ஏன்னுடைய முதல் தொகுப்பான பதுங்குகுழியில் பிறந்த குழந்தை 2008ஆம் ஆண்டு மார்கழியில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. ஆன்றைய நெருக்கடி காலகட்டத்தில் எதைக் குறித்தும் பேச முடியாமல் போர் நடந்தது. தவிரவும் தமிழகத்துடன் ஒப்பிடுகையில் அங்கு மேற்கொள்ளப்படும் நேர்த்தியான அச்சுக்கலை இங்கு இல்லை. ஆதற்கான வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. ஏண்பதுகள் தொண்ணுறுகளில் இருந்த அச்சுக்கலையின் நேர்த்தி இப்பொழுது இல்லை. இன்றைய காலத்திற்கு அப்பால்பட்ட புத்தகங்களை இங்கு பதிப்பிக்க தடையில்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டியதே. எனினும் ஈழத்தில் பல புத்தகங்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஏன்னுடைய எழுத்துக்களை ஈழத்தில் பதிப்பிக்கும் காலம் திரும்பும் என்று நம்புகிறேன். அது எங்கள் வாழ்க்கை குறித்தும் அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் நேர்மையுடன் பேசக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஒப்பனை மனிதர்களின் உலகம்...


புன்னகை பூக்கும் மனிதர்களின் பின்னால் 
இத்தனை பெரிய குழிபறிப்புத் திட்டமா?

வாழ்த்துப்பாடும் மனங்களின் மறைவில்
சரித்துவிடத் துடிக்கும் சாத்தானின் சூழ்ச்சியா?

உள்ளத்துள் விஷத்தையும் உதட்டிலே இதத்தையும் 
இவர்களால் எப்படி சோடிக்க முடிகிறது?

எத்தனை தடைகளை உடைத்து 
ஒருவன் உருவாக்கி வருகிறான்..?
அவனின் அத்தனை தடைதாண்டல்களிலும் 
ஆயிரம் சகுனிகள், இராவணன்கள் 
நுழைந்துதானே விடுகிறார்கள்..? 

நீதி நியாயம் பந்தம் பாசமெல்லாம்
இங்கே இறந்து நெடுநாளாகி விட்டதோ?

இன்று நட்பைப் போர்த்துபவன் தான்
நாளை நமக்குப் பாடை கட்டுகிறான் இப்போதுகளில்...

யாரை நம்புவது? யாரைத் தவிர்ப்பது?
இணங்க காண முடியவில்லை...
முகமூடி தரித்துளவும் மனிதர்கள் நடுவில்...!

-இராமசாமி ரமேஷ்-
அளம்பில். 

திங்கள், 11 ஜூன், 2012

கவியின் ஏக்கம்-

கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு 
ஈழத்துக் கவிதை உலகில் இன்று இளையவர்களும் ஆரோக்கியமான இலக்கியப் படைப்புக்களைப் படைக்கத்தொடங்கி விட்டார்களென்று பறைசாற்றும்விதமாய் வந்திருக்கிறது இளங் கவிஞர் முல்லை திவ்யனின் கவியின் ஏக்கம் கவிதைத் தொகுதி. 
வடமாகாண இலக்கிய விருதினைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளரான அமரர் ஆனந்தமயிலின் புதல்வராய் இலக்கியத்துள் நுழைந்துகொண்ட முல்லைதிவ்யனின் இரண்டாவது கவிதைத் தொகுப்புத்தான் இந்த கவியின் ஏக்கம். நம்நாட்டின் பத்திரிகைகளையும் இலக்கிய இதழ்களையும் ஆக்கிரமித்திருந்த இவரது முதலாவது படைப்பாக "நல்லதோர் கனவும் அந்தரிப்போரும்" என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் வெளிவந்திருந்தது. இது இரண்டாவது பிரசவமாகியுள்ளது. 
இலக்கியத்தையே இலக்காகக் கொண்டு தன்னுடைய கவிதைப் பயணத்தை நகர்த்திவரும் முல்லைதிவ்யனது கவியின் ஏக்கத்தைப் பற்றி விலாவாரியாக ஆராய்வது பொருத்தமென நினைக்கிறேன். 
"மிதித்த பூர் சாகாத மென்னடைப் பாரதியாய்- அதிகமாய்ப் பேசாத இன்முக  வாரிதியாய்..." என கவியின் ஏக்கத்திற்கு அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் சு.க.சிந்துதாசன் ஆசிரியர் முல்லைதிவ்யனைக் கூறுகின்றார். 
"ருது சிங்காரம்" எனத் தொடங்கி '' நீயும் எதோ இறை சிருஸ்டி '' என்று 38 கவிதைகளை இந்நூல் தரித்திருக்கின்றது. பெரும்பாலும் இப்போதுகளில், நாளுக்குநாள் பல கவிதை நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சில கனதியான தொகுப்புக்கள் காத்திரமான கவிதைகளை பிரசவித்து தமது இருப்பை உறுதிசெய்து கொள்ள, பல படைப்புக்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்துபோய் விடுகின்றன. 
 இந்நிலையில், தன் பிறந்த மண்ணின் ஆதியை தன்னுடைய முதல்ப் பெயராகத் தரித்துக்கொண்ட முல்லை திவ்யன், நூலில் கவிதைகளின் தொகையை நீட்டாமல் அளவோடு கோர்த்திருப்பது தொகுப்பை அழகாக்குகிறது. 
இன்று பலர் எடுத்துக்கொள்ளும் கற்பனை அரிதாரத்தை முல்லை தனது படைப்புக்களில் கையாளாதமை, கவிதைகளின் தரத்தை அதிகரிக்கின்றன. தன்னுடைய படைப்புக்களின் உள்ளடக்கத்தில் யதார்த்த வாழ்வியலை அதிகமாய் பேச முனைந்துள்ளமை புரிகின்றது. மக்களின் வாழ்வியல் நிலை, இழந்துவிட்ட இன்பங்கள், அறவழி செல்லத் தூண்டும் கருத்தாளம் மிக்க கவிகள், போரினால் சிதைந்துபோன மனித பண்பாட்டுக் கோலங்கள் பற்றி கவிஞருக்கிருந்த வலிகள், ஏக்கங்கள் தான் கவியின் ஏக்கத்தை  கவிதைகளாய் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.  
செம்மண் வீதிகளில்
நடந்து சென்ற பொழுதுகளை 
ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்....

நாளாந்தம் ஏறியிறங்கிய 
கொல்லைப்புற பாலைமரமும் 
மரமுந்திரிகை மரமும்.... என, நகரும் "குடியிருப்புக் கல்லறையின் குரல்" என்ற கவிதையல் கவிஞர் தான் இழந்துவிட்ட தனதூரின் மகிழ்வளித்த நிமிடங்களை ஏக்கத்தோடு  நினைவுகூருகிறார்.  தங்கள் வாழ்வியலை அடையாளம் செய்து கவிதையின் மூலம் காயங்களை ஆற்றிக் கொள்ள இவர் முனைகிறார். 
அடுத்து, "பரிபூரனின் மேல் பழி" என்னும் கவிதையில் 
சாதியென்று சொன்னோம்
ஒன்றாக நின்று 
எதையாவது சாதித்துக் காட்டினோமா? 
இல்லை... 
நாடு என்று சொன்னோம்
எல்லோரது நாவுக்கும் சுதந்திரம் கண்டோமா? 
இல்லை... என்றவாறு, முரண்பாடுகளை தோற்றுவித்து அதனை மனித குலமே தீர்க்க முயலும் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார். 

நிலையில்லாதவைகளை நோக்கி நகரும் மனிதத்திற்கு நியத்தை உணர்த்தும் பாடுபொருள்கள் அதிகம் கவியின் ஏக்கத்தில் பேசப்படுகின்றன. இடைக்கிடை கவிஞரின் வயதைச் சுட்டுவதாய் காதல் கவிதைகளும் அரங்கேறி விட  தவறவில்லை. எதிர்பார்ப்புக்களையும் பிரிவின் வழிகளையும் மாற்றம் பெறவேண்டிய விண்ணப்பங்களுமாய் ஆசிரியரின் மன வேண்டுதல்கள் இத்தொகுப்பு முழுவதும் பரவிக்கிடக்கின்றன. 

படைப்பை வெறுமனே நுகர்ந்துவிட்டு மட்டும் நின்றுவிட முடியாதல்லவா?  கவிஞரின் அடுத்த நகர்வுக்கு சில ஆலோசிப்புக்களை இந்த விமர்சனமும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்துள்ளது. இதனால் இத்தொகுப்பில் சில கவிதைகளின் நகர்த்தல்கள் வாசிக்கும் தருணங்களில் குழப்புகின்றன என்று சொல்லத் தோன்றுகிறது. கவிதையில் தான் சொல்ல வந்த விடயத்தை கொண்டு நகர்த்தும் பாணியை ஆசிரியர் கொஞ்சம் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.  தலைப்புக்களின் அமைப்புக்கேற்பஉள்ளடங்கல்கள் பேசவேண்டும் என்பதும் மற்றுமொரு நிபந்தனையாகும். 
நம்மைக் கடந்துபோன எல்லோரும் பாடியவைகளை தவிர்த்து நமக்கென, இதுவரை இணங்க காட்டப்படாத நிலைமைகளை கண்டெடுத்து இலக்கியம் சமைக்கப்படுகின்றபோது அது காலத்தைக் கண்ணாடியாகக் காட்டும் பெறுமதியான படைப்பாக பேசப்படும் என்பதில் ஐயமில்லை. 

இந்தவகையில், தன முயற்சியில் தளராதவராய் இரு கவிதைத் தொகுப்புக்களை நமக்குத் தந்திருக்கும் முல்லை திவ்யனின் முதலாவது படைப்புக்கும், இப்போதைய "கவியின் ஏக்கம்" என்ற இந்த இரண்டாவது நூலுக்கும் பல முன்னேற்றத் தழும்புகள் தென்படுகின்றமையால் இனிவரப்போகும் இவரது கைவண்ணங்கள் இன்னும் மெருகாகி முகிழ்ந்து நமது இலக்கியப் பரப்பில் பேசப்பட வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பாகும். 
இராமசாமி ரமேஷ். 

வெள்ளி, 8 ஜூன், 2012

தீப் பற்றிய சம்பவத்தில் பாதிக்கப்படவர்களுக்கு உதவிப்பொருட்கள் கையளிப்பு.



நேற்றைய தினம் முல்லைத்தீவு நாயாறு   பிரதேசத்திலுள்ள வாடிகளில் ஏற்பட்ட தீ விபத்தினால் பதினோரு மீனவ வாடிகள் எரிந்து தீக்கிரையான சம்பவத்தை அடுத்து, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் உடனடியாக பாதிக்கப்பட்ட  மக்களுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. 
  சிலாபம், கருக்குப்பனை போன்ற பிரதேசங்களில் இருந்து தொழில்  செய்வதற்காக வந்து தங்கியிருந்த மக்களின் வாடி வீடுகளே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளன. ஒரு வாடியில் பற்றிக் கொண்ட தீயினாலே ஏனைய வாடிகளும் எரிந்துள்ளதோடு, ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு மேலான பெறுமதியுள்ள தொழில் உபகரணங்களும் அவர்களுடைய உடமைகளும் அழிந்துள்ளன. அத்தோடு,  இவர்களில் பாதிக்கப்பட்ட பதினோரு வாடிகளைச் சேர்ந்த ஐம்பத்து நான்கு பேருக்கும் உடனடியாக உணவுப் பொருட்கள், சமையல் பொருட்கள்  மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் என்பனவற்றை இலங்கை செஞ்சிலுவைச் சங்க முல்லை மாவட்ட நிறைவேற்றுப் பொறுப்பதிகாரி எஸ்.சதீஸ்வரன்    வழங்கி  வைத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.  



வெள்ளி, 1 ஜூன், 2012

பாரதிக்கு முதன்மை வழங்கும் கொழும்பு தமிழ்ச் சங்கம் போல் வேறெங்குமில்லை. -இந்தியக் கவிஞர் அறிவுநம்பி-



மக்கள் விடுதலைக் கவிஞன் பாரதிக்கும் அவன் படைப்புகளுக்கும் முன்னுரிமை அளித்து, அவனை முதன்மைப் படுத்தி  அவனுடைய படைப்புக்களை பொக்கிஷங்களாக  பேணிப் பாதுகாக்கும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தைப் போல, உலகில் வேறெங்கும் ஒரு அமைப்பையோ அல்லது நிறுவனங்களையோ நான் பார்த்ததில்லை என்று, இந்தியாவின் புதுவை பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞருமான  முனைவர் அ.அறிவுநம்பி தெரிவித்துள்ளார். 
கொழும்பு தமிழ்ச் சங்கமும்,  இந்தியாவின் சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து நடாத்திய  பாரதியார் விழா நேற்று காலை கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகியது. அவ்விழாவில் பங்கேற்று கருத்துரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
                  எட்டயபுரத்துக் கவிஞன் பாரதிக்கு விழாவெடுக்கும் இந்நிகழ்வில் முனைவர் அறிவுநம்பி மேலும் தனது உரையில், 
"பாரதி வாழ்ந்த காலங்களில் சங்ககாலப் பாடல்கல்களின் எடுகோள்களான காதல், வீரம் போன்றனவற்றைத் தான் நம்முடைய மூத்த கவிகள் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், மக்களின் பாடுகளையும் மனித அவலங்களையும் வாழ்க்கைக் கோலங்களையும் எடுத்துரைக்கும் பாடல்களை பாரதிதான் முதலில் கண்டுகொண்டு தன்னுடைய படைப்புக்களில் வெளிப்படுத்தினான். அன்னியரின் ஆதிக்கத்தினும் அமிழ்ந்திருந்த இந்திய நாடும் மக்களும் அனுபவித்த கொடிய துன்பங்களில் இருந்தும், அறியாமைக்குல்லிருந்தும் அவர்களை வெளியில் எடுப்பதற்கு பாரதி தன்னுடைய பாடல்களின் மூலம் முயற்சி செய்து வெற்றி கண்டான். அப்படிப் பட்ட பாரதிக்கு இந்தியர்கள் கொடுத்த முக்கியத்தை விட, இலங்கையில் கொழும்பு தமிழ்ச் சங்கம் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை இங்கு வந்தவுடனேயே நாங்கள் கண்டு பூரித்துப் போனோம். தமிழ்ச் சங்கத்தின் அலுவலகத்தினுள் நுழைந்தவுடனேயே தென்படுவது பாரதியின் இரு கரங்கள் கூப்பிய படம் தான். அப்போது எங்கள் தத்துவ புரட்சிக் கவிஞன் பாரதிக்கு இங்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் எங்கள் அனைவருக்கும் உள்ளத்தை களிப்பூட்டும் நிகழ்வாக அமைந்தது. 
அத்தோடு எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு பணிசெய்து வரும் தமிழ்ச் சங்கத்தின் பணியினையும் அது பெற்றிருக்கும் முக்கியத்துவத்தையும் பார்த்து வியப்படைந்தோம். இதனை இப்போது நல்வழிப் படுத்தி கொண்டுனகர்த்தும் இப்போதைய கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் அவர்களுக்கு எமதி சென்னை பாரதியார் சங்கத்தின் சார்பிலும், இந்திய மக்கள் சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவருடைய உரையில் தெரிவித்திருந்தார். 
            மேலும் இந்த பாரதி விழாவில், இந்தியாவின் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த கவிஞர்களினால் பார்போற்றும் பாரதி என்னும் தலைப்பில் கவிதாஞ்சலியும், பேராசிரியர் முனைவர் இரா.சேதுவின் தலைமையில் புதியன பாடிய புலவன் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், இந்திய பெண் கவிங்கர்களால் பாரதியின் கவிதைகளில் உள்ளம் கவர்ந்த ஓர் அடி என்ற மகளீர் முற்றம் நிகழ்வும், இரு எழுத்தாளர்களின் நூல் வெளியீடும் அத்தோடு பாரதியின் புகழ் பரப்புனர்களை கௌரவிக்கும் முகமாக பாரதி விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் வளர்க்கும் நம்மவர்களோடு இந்தியாவைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் தமிழ்த் துறை ஆர்வலர்களோடு மக்களும் ஊடகத் துறையினரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.