மக்களின் இரசனைகளை கட்டிப் போடும் ஊடகங்களுக்குள் இன்று நமது நவீன ஊடகங்கள்தான் அதிகம் தாக்கம் செலுத்தி வருகின்றன. எம்மவர்களின் பொழுதுகளை இப்போது வானொலி தொலைக் காட்சிகள்தான் அதிகம் ஆக்கிரமித்துள்ளன என்பது கண்கூடு. இந்தவகையில், மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவரும் , தற்போதுள்ள வானொலி ஒலிபரப்பாளர்களில் அழகான குரலுக்கு சொந்தக்காரருமான வர்ஷி வைத்தியலிங்கத்தை மித்திரன் நேர்காணலுக்காய் சந்தித்தோம். அவரின் அனுபவங்களும் சுவாரஸ்யமான பதிவுகளும் இனி உங்களுக்காகவும்...
1 )உங்களுடைய ஊடகத்துறைக்கான ஆரம்பகாலம் எப்படி தொடங்கியது?
நான் பிறந்தது கொழும்பில் என்றாலும், வளர்ந்தது அழகிய குளிர்மையான பிரதேசமான பொகவந்தலாவை. எனது குடும்பம் அழகான சின்னக் குடும்பம். அப்பா வைத்திலிங்கம் (வர்த்தகர்) அம்மா தனலக்ஸ்மி (குடும்ப நிர்வாகி) என்னை சமூகத்திற்கு அடையாளம் காட்டி இன்றுவரை என் வளர்ச்சிக்கு காரணமாய் இருப்பவர் என்னை பெறா அன்னை செல்வி சரோஜா (பிரதி அதிபர் டின்சின் தமிழ் மகா வித்தியாலயம் )
என்னுடைய ஆரம்ப கல்வியை ஹோலிரோசரி தமிழ் மகா வித்தியாலயம்,சென் மேரிஸ் கல்லூரி மற்றும் உயர்தரத்தை ஹட்டன் ஹய் லான்ஸ் கல்லூரியிலும் கற்றேன் .
சின்ன வயசிலிருந்து ஊடகம் மீதும் கலை மீதும் ஆர்வம் அதிகம். பள்ளிப் பருவத்தை நிறைவு செய்துவிட்டு ஊடகவியல் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்தேன். . பிரபல இயக்குனர் திரு பராக்கிரம நெரிஎல்ல அவர்களின் மக்கள் களரி நாடக பயிற்சிப் பட்டறையில் இணைந்து பல்வேறு பட்ட பயிற்சிகளையும் பெரும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அந்த அடிப்படைகளை என்னுடைய ஊடகத்துறைக்கான நுழைவுத் தகுதியாகக் கொண்டு ஆரம்பித்தது இந்த ஒலிபரப்பாளினி வாழ்க்கை.
2 )வானொலித்துறையில் உங்களின் வருகை எப்படி அமைந்தது?
என்னை உருவாக்கி ஊக்குவித்து இப்போது நான் இருக்கும் இந்த நிலைக்குக் காரணமானவர்கள் என் பெற்றோர்கள். அடுத்து எனக்கு வழிகாட்டியவர் சிறிய அன்னை செல்வி சரோஜா, மற்றும் எனக்கு இந்ததுறையில் வழிகாட்டியாக இருந்தவர் என் அன்பான அண்ணா அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா . நான் இந்ததுறைக்கு வந்தது எதிர் பாராத சமயத்தில் கிடைத்த வரம் என்று சொல்லலாம். சூரியன் கலையகத்திற்கு ஒரு நாடகத்திற்கான குரல் பதிவிற்காக அண்ணா அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பாவுடன் சென்றிருந்தேன். அதுதான் என் முதல் வானொலி பிரவேசம் ! அப்போது என் குரல் பிடித்திருந்ததால் நான் அறிவிப்பாளர் நேர்முக தேர்வுக்காக அழைக்கப்பட்டேன். அந்த தேர்வில் தெரிவு செய்யப்பட்டு சூரியன் பண்பலைக் குடும்பத்தில் இணைந்து கொண்டேன். எப்போதுமே எனக்கு நல்ல ஆரம்பத்தை வழங்கிய பெருமை அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா அண்ணாவுக்கும் சூரியனுக்குமே!
3 .இப்போது உங்களின் அறிவிப்பாளினி வாழ்க்கையில் மிகவும் முக்கியமாக உங்களுக்கு உதவுகின்றவர்கள்?
இப்போது, சூரியன் வானொலியின் ஆலோசகர் திரு சி.நடராஜசிவம் அவர்கள் நிறைய பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதுடன் இன்றுவரை என் நிகழ்சிகளை கேட்டு ஆலோசனைகளை வழங்கி வழிநடத்துகிறார். அதேபோல சூரியன் வானொலியின் தலைமை பொறுப்பதிகாரி திரு நவநீதன் அவர்களும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் நுணுக்கங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களையும் கற்றுத்தந்து இன்றுவரை ஊகுவித்து பக்க பலமாக இருந்து வருகிறார். அதுமட்டும் அல்லாது என்னுடைய சகல விடயங்களிலும் பக்க பலமாக என் சக அறிவிப்பாளர்கள் என்னுடன் இருக்கின்றார்கள்.இவர்களுடன் மிக பெரிய பலம் சூரியனின் நேயர்கள். இவர்கள் அனைவருமே என் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் அனைவருடைய வழிகாட்டலும் ஊக்குவிப்பும் தான் எனக்கான இந்த ஊடகப் பாதைக்கு வழிகாட்டுகின்றன.
4) ஆரம்பத்தில் வானொலித் துறையில் உங்களுக்கு எப்படியான அனுபவங்கள் ஏற்பட்டன?
நான் வானொலிக்கு நுழைய முன்னமே, என்னை பல பயிற்சிகள் மூலம் தயார்ப்படுத்தியிருந்தேன். அதனால், என்னுடைய ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை மிகவும் சந்தோஷமான அனுபவமாகவே அமைந்துள்ளது. நிறைய விடயங்களை இன்றுவரை கற்றுகொள்ளும் ஒரு களமாக சூரியன் அமைந்துள்ளது.
இந்த ஊடகத்துறை ஒவ்வொரு நாளும் புதிதான விடயங்கள், புதிய அனுபவங்கள், பல புதிய நண்பர்கள் என அத்தனையும் வித்தியாசமான ஒரு அனுபவத்தை பெறகூடிய ஒரு இடம் இது. ஆகவே இங்கு கஷ்டங்கள் அனுபவங்களாக அமைந்து நம்மை புடம் போடும் ஒரு இடமாகவே அமைந்துள்ளது.
5 ) ஒரு ஒலிபரப்பாளருக்கு இருக்கவேண்டிய தகுதிகள் என்று நீங்கள் கருதுகின்றவை?
இந்தத் துறைக்குள் நுழைவதற்கு முதலில் தமிழிலும் அதேபோன்று ஏனைய மொழிகளிலும் நல்ல புலமை இருக்க வேண்டும். இன்னும் விசேடமாக சுவாரஸ்யமாக நகர்த்தும் கருத்தாழம் மிக்க குரல்வளம், மொழியை லாவகமாக கையாளும் திறன் என்பன கட்டாயமாக இருக்க வேண்டும். அத்தோடு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ,பணிவு என்பன இருந்தால்த் தான் நாங்கள் இந்த தளத்தில் தொடர்ந்து பயணிக்க முடியும். இவைதான் நமக்கான அடையாளங்கள்.
6 )இன்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இப்போதுள்ள தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளில் சிலர் தமிழ் புலமை இல்லாமல் ஆழ்ந்த அறிவு இல்லாமல் உச்சரிப்புப் பிழைகளோடு நிகழ்ச்சிகளையும், செய்தி அறிக்கைகளையும் செய்வதாக! இது எந்தளவுக்கு உண்மை என நீங்கள் கருதுகிறீர்கள்?
வானொலிகளை மட்டும் குற்றம் சாட்டுவது ஏற்றுகொள்ள முடியாத ஒரு விடயமாகும். ஒருவரின் கவனயீனம் காரணமாக ஒட்டுமொத்த நிறுவனத்தையும் குறை சொல்ல முடியாது. இருப்பினும், ஒரு தனி நபர் தன் பிழைகளை திருத்திக் கொள்ளும்போது இந்த குற்றச்சாட்டிற்கான தீர்வு கிடைக்கும் என்ன நான் நம்புகிறேன். மீண்டும் சொல்கிறேன். தமது துறைசார்ந்த பூரணமான அறிவோடு இத்துறைக்குள் நுழைய வேண்டும். எம்மோடு இருப்பவர்களின் தகுதிக்கு தக்க வகையில் நம்ம நாளுக்குநாள் தயார் செய்ய வேண்டும்.
7 ) இப்போது புதிய பல தனியார் வானொலிகள் முளைத்துக் கொண்டு வருகின்றன. அவற்றின் வரவால் எத்தகையதான நிலைமைகள் நமது இப்போதைய சூழலில் ஏற்ப்படலாம்?

அதிகமானோர் வீட்டில் இருக்கும் நேரம் மட்டும்தான் தொலைகாட்சியை பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.இப்பொழுது ஏராளமானவர்கள் இணையத்திலும் தங்கள் தொலைபேசிகளிலும் வாகனங்களிலும் வானொலியை கேட்கும் சந்தர்ப்பம் அதிகமாகவே உள்ளது அகவே வானொலிக்கான வரவேற்பு என்றும் குறையாது என நினைக்கின்றேன். இந்த நிலையில் தமக்குப் பிடித்த வானோலியைத்தான் நேயர்கள் கேட்பார்கள். அத்தோடு,மக்களின்
இராசனையரிந்து நிகழ்ச்சிகள் படைக்கப்படும் போது அது வெற்றியடையும்.
எத்தனை வானொலிகள் வந்தாலும் அவை சுமக்கின்ற உள்ளீடுகளால் தான் அவை தமது இலக்கை அடைகின்றன. எனவே, பல வானொலிகளின் வரவு, ஊடகங்களின் ஆரம்பம் ஆரோக்கியமானதே!
10 ) இறுதியாய், இனிமேல் ஒலிபரப்புத் துறைக்கும் பிரவேசிக்கக் காத்திருக்கும் இளையவர்களுக்கு ஒரு மூத்த ஒலிபரப்பாளர் என்கின்ற வகையில் உங்களது ஆலோசனை என்ன?
மூத்த ஒலிபரப்பாளர் என்பதைவிட சற்று அனுபவம் பெற்றவர் என்றவகையில் ஆர்வமாக காத்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கு என்னால் கூற முடிந்தது. உங்களுக்கான இடம் நிச்சயமாக உள்ளது. அந்த களம் கிடைக்கும்வரை முயற்சிசெய்யுங்கள். நம்பிக்கையோடு தனிப்பட்ட ரீதியில் உங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் இந்தத் துறைகளில் நீங்கள் நீடித்து நிலைத்து வெற்றியடைய முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக