புன்னகை பூக்கும் மனிதர்களின் பின்னால்
இத்தனை பெரிய குழிபறிப்புத் திட்டமா?
வாழ்த்துப்பாடும் மனங்களின் மறைவில்
சரித்துவிடத் துடிக்கும் சாத்தானின் சூழ்ச்சியா?
உள்ளத்துள் விஷத்தையும் உதட்டிலே இதத்தையும்
இவர்களால் எப்படி சோடிக்க முடிகிறது?
எத்தனை தடைகளை உடைத்து
ஒருவன் உருவாக்கி வருகிறான்..?
அவனின் அத்தனை தடைதாண்டல்களிலும்
ஆயிரம் சகுனிகள், இராவணன்கள்
நுழைந்துதானே விடுகிறார்கள்..?
நீதி நியாயம் பந்தம் பாசமெல்லாம்
இங்கே இறந்து நெடுநாளாகி விட்டதோ?
இன்று நட்பைப் போர்த்துபவன் தான்
நாளை நமக்குப் பாடை கட்டுகிறான் இப்போதுகளில்...
யாரை நம்புவது? யாரைத் தவிர்ப்பது?
இணங்க காண முடியவில்லை...
முகமூடி தரித்துளவும் மனிதர்கள் நடுவில்...!
-இராமசாமி ரமேஷ்-
அளம்பில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக