ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் ...இன்னும் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது.
ஒரு தமிழ் தேசியப் பற்றாளராக தமது ஊடக ஆரம்பத்தை சிங்களப் பத்திரிக்கையான தி ஐலன்ட் இல் தான் தராகி என்னும் பனை பெயரைத் தாங்கியபடி பத்தி எழுத்தாளராக ஆரம்பித்தார். தமிழ் மக்களின் வாழ்வியலை சிங்கள மக்களும் புரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கோடு தான் இவரது படைப்புக்கள் வெளியாகின. தமது வாதத்தையும், மக்களின் உண்மையான வாழ்வியலையும் வெளியுலகுக்கு தெரியப் படுத்துவதற்கு பல பிற மொழி ஊடவியலாலர்களோடு தர்க்கித்தார். இருப்பினும், தொழில் ரீதியான நட்புறவை இவர் ஒருபோதும் சிதைத்துக் கொள்ளவில்லை. தமது உயிருக்கு இப்படியான ஊடகப் பயணம் உலைவைக்கும் எனத் தெரிந்திருந்து, தன்னம்பிக்கையோடு பேனாவினால் போராடிய சிவராமின் உயிரை இறுதியில் நாசகாரிகள் april 28அன்று
பறித்தே விட்டனர்.
சிவராம் பறிக்கப் பட்டாலும், சிவராமின் எழுத்துக்கள் இன்றும் உயிர்வாழும் நிலையில், இவருடைய ஊடகப் பயணத்தில் எழுதப்பட்ட தடங்கள் என்றுமே தமிழ் உலகை விட்டு நீங்காது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக