முல்லைத்தீவு திருகோணமலை மாவட்டங்களைப் பிரிக்கும் எல்லைக் கோடாக அமைந்துள்ள இயற்க்கை வளம் கொட்டிக்கிடக்கும் பிரதேசங்கள் தான் இந்த முகத்துவாரம் தொடங்கி நாயாறு வரையான பகுதிகள். 1982 களில் போரின் தாக்கத்தினாலும் வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டு தமது வளமான மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள் இந்த கொக்கிளாய் மற்றும் கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், கொக்குத்தொடுவாய் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள். கால்நடை வளர்ப்பு, சேனைப்பயிர்ச் செய்கை மற்றும் வேளாண்மை என இவர்களுடைய வாழ்வாதாரத் தொழில்களின் மூலம் தன்னிறைவானதொரு பொருளாதார நிமிர்வை இம்மக்கள் எட்டிப் பிடித்திருந்தார்கள் என்பது யாவரும் அறிந்த நிதர்சனமான உண்மை. இவ்வாறு வாழ்ந்த மக்கள் ஆக்கிரமிப்புக்கள் அதிகமாகத் தொடங்க இடம்பெயரத்தொடங்கினார்கள். செம்மலை, அளம்பில், பூதன்வயல், தண்ணிமுறிப்பு, முறிப்பு, தண்ணீரூற்று, நீராவிப்பிட்டி,முள்ளியவளை போன்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் தஞ்சம் புகுந்தார்கள். அன்றிலிருந்து அகதி வாழ்க்கையை ஆரம்பித்த மக்கள், அடைந்த நெருக்கடிகள், துன்ப துயரங்கள் கொஞ்சமல்ல! வாழ்வாதாரத்தை நிவர்த்திக்கவே பெரும் திண்டாட்டம்தான். படிப்படியாக மீண்டும் அடைக்கலம் புகுந்த பிரதேசங்களில் தமது தொழில்களை செய்யத்தொடங்கிய மக்கள், ஓரளவுக்கு வாழ்க்கையை சமாளிக்கத் தக்கவர்களானார்கள்.
வன்னி மண்ணில் வளமானதொரு வாழ்க்கை கிடைத்திருந்தாலும், தம் சொந்த நிலத்துக்கு எப்போது மீள்வோம் எனும் நப்பாசையும் எதிர்பார்ப்பும் நாளுக்குநாள் இம்மக்களிடம் அதிகரித்துக் கிடந்தது. கொக்கிளாய் பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களான கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், கொக்குத்தொடுவாய் போன்ற பகுதி மக்களும் இடம்பெயர்ந்து வந்த பிற்ப்பாடு இவர்களுடைய வாழ்விடங்கள் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் போர் மூளும் சூனியப் பிரதேசமாக மாறிப்போனது. அடிக்கடி இப்பிரதேசங்களில் யுத்தம் நடந்தபடியினால் இந்த அப்பாவி மக்களின் வளங்கள்,சொத்துக்கள் சூறையாடப்பட்டு அழிந்து போயின. இச் சந்தர்ப்பத்தில்தான் உக்கிரமான போர் இருதரப்பினருக்கும் ஆரம்பமாகி அனைத்து வன்னி மக்களும் மீண்டும் இடம்பெயர்ந்து அகதிகளாகி வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டு திரும்பவும் இரு வருடங்களின் பின்னர் சொந்த ஊர்களுக்கு ஒருசில பகுதியினர் மீள்குடியேற்றம் எனும் பெயரில் அனுப்பி வைக்கப் பட்டனர்.
ஏராளமான உறவுகளை போருக்கு இரையாக்கிவிட்டு என்சியவர்களோடு மீண்டும் ஊருக்குப் போவோமா என இம்மக்களும் காத்திருந்தார்கள். இரண்டரை வருடங்களின் பின்புதான் அரசின் பார்வை இம்மக்களின் மீது விழுந்தது. பெரும் எதிர்பார்ப்புக்களோடு 30 வருடங்களின் பின்னர் தமதூர் திரும்பினார்கள். ஆனால், இவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது கொடுமை.
காணிகள் பற்றைக் காடுகளாகவும், பொதுச் சொத்துக்கள் சிதைக்கப்பட்டும் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டும் கிடந்தன. இதைவிட பெருமளவான மக்களின் சொந்தக் காணிகள் இராணுவத்தினரின் முகாம்களாகி இருந்தன. இத்தனை மாற்றங்களோடு மீளக்குடியேறி ஒரு வருடகால இடைவெளியாகியும், இதுவரை பூரணமாக அடிப்படை வசதிகளைப் பெறவில்லை என்பதே வேதனையளிக்கும் விடயமாகும்.
ஊடகங்களில் இப்பிரதேசங்களில்தான் அபிவிருத்தி அதிகமாக நடைபெறுகின்றன என்று செய்திகள் பரப்பப்பட்டாலும் , நேரடியாக இங்கே வந்தபோதுதான் அப்பிரச்சாரங்கள் வெறும் கண்துடைப்பு என்பது புரிந்தது. மீளக்குடியேறி ஒரு வருடங்களாகியும் இதுவரை குடிதண்ணீர் வசதிகூட சரியாக பெற்றுத்தரப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர். ஆனாலும் அரச தரப்பில் சொல்லப்படும் கருத்துக்கள் இத்தகைய பிரச்சினைகள் வெறும் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் என்பதுபோல் கூறப்படிகின்றமை கவனிக்கத்தக்கது.
-இதுவரை தற்காலிகமாக தமக்கு வழங்கப்படும் வீடுகளே பூரணமாக இன்னும் வழங்கப்படவில்லை என மக்கள் தெரிவித்த கருத்துக்களை நாங்கள் அப்பகுதி அரச உத்தியோகத்தர் ஒருவரோடு தொடர்புகொண்டு கேட்டோம்.
குறித்த கொக்கிளாய் மேற்கு மற்றும் கொக்கிளாய் கிழக்கு ஆகிய பிரிவுகளில் உள்ளடக்கப்பட்டு கருநாட்டுக்கேணி, முகத்துவாரம், கொக்குத்தொடுவாய், புளியமுனை போன்ற பிரதேசங்களில் சுமார் 300 குடும்பங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 100 சிங்கள குடும்பங்கள் முகத்துவாரம்,புளியமுனை பகுதியில் வாழ்கின்றனர். இவர்களில் தற்போது பெரும்பாலானவர்களுக்கு தற்காலிக வீடுகள் சோபா என்னும் நிறுவனத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டு விட்டன. மீதமுள்ளவர்களுக்கும் இப்போது வீடுகள் கையளிப்பதர்க்குரிய வேலைகள் நடைபெற்று வருகின்றன. மக்களின் தேவைகளை நாமும் ஏராளமான நிறுவனங்களுக்கும் அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளோம். படிப்படியாகத்தானே இவைகளை பூரணமாகக முடியும்? உடனடியாக செய்து முடிக்கக் கூடியளவில் வசதி வாய்ப்புக்கள் இல்லை தானே? என்றவரிடம், மக்கள் முன்வைக்கும் இன்னொரு பிரச்சினையையும் குறிப்பிட்டோம்.
-இன்னும் குடிதண்ணீர் வசதி போதியளவுக்கு பெற்றுத்தரப்படவில்லையெனவும் மலசலகூடம், கல்வி வசதிகள் என்பன குறையாகவே உள்ளதே என்றபோது...
குடிதண்ணீர் பிரச்சினை என்பது இன்று நேற்றல்ல! காலம் காலமாக இருந்து வருகின்ற பிரச்சினைதான் இது. அனைத்து மக்களுக்கும் குடிதண்ணீர் வசதிகளை நாமும் முடிந்தளவில் செய்து கொடுத்துள்ளோம். குழாய்களின் மூலம் நீர் வழங்கப்படுகின்றது. இதனை இராணுவத்தினர் தற்போது செய்து வருகின்றார்கள். இன்னும் சிறிது காலத்தில் இப்பிரச்சினை முழுமையாக நிவர்த்திக்கப்பட்டுவிடும். அடுத்து கல்வி நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில், 200 மாணவர்கள் இங்கே கொக்கிளாய் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்கள். இவர்களுக்குரிய பாடங்களை நாங்கள் 18 ஆசிரியர்களை வைத்து நடத்துகின்றோம். பாடசாலையையும் மீள புனரமைப்பதற்கு சில வேலைப்பாடுகளை செய்துள்ளோம். (ஆனால் மக்கள் தரப்பில் 18 ஆசிரியர்கள் இருந்தாலும் இவர்களில் 8 ஆசிரியர்களே பாடசாலைக்கு சமூகமளிப்பதாகவும், ஏனையவர்கள் தமக்கு விரும்பிய நேரத்தில் வந்து போவதாக மக்களால் தெரிவிக்கப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. ) மலசல கூட வசதிகள் ஓரளவுக்கு அனைவருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக வீடுகள் வழங்க்கப்படாதவர்களுக்குத் தான் இன்னும் மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அதுவும் விரைவில் பூர்த்தி செய்யப்படும். மக்கள் சொல்வதைப் போன்று இவர்களுக்குரிய வசதி வாய்ப்புக்களை நாங்கள் செய்து கொடுக்காமல் இல்லை. ஆனாலும், அவை படிப்படியாகத்தான் செய்யப்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
இவருடைய கருத்துக்கள் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றபோது, மக்களால் பல குற்றச்சாட்டுக்கள் அரசை நோக்கி எறியப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளிலுள்ள இருதரப்பு நிலைமைகளிலும் உள்ள நிஜத்தை கண்டறிய அப்பகுதியிலுள்ள மதத்தலைவர் ஒருவரை நாடினோம். அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
முகத்துவாரம் பகுதியில் தற்போது வாழ்கின்ற சிங்கள மக்கள் தொழிலின் நிமித்தம் நீர்கொழும்பு, புத்தளம் போன்ற இடங்களிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு மின்சாரம், சுயதொழில் வாய்ப்புக்கான ஊக்குவிப்புக்கள் என்பன வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதில் குறிப்பிடக் கூடியது யாதெனில், இந்த முகத்துவாரம் பகுதி 1980 களில் தமிழ் மக்களுக்கு உரித்துடைய நிலங்களாக இருந்துள்ளன. இப்போது தொழிலுக்கு வந்த மக்கள் தம்மை இப்பகுதிக்குரிய நிரந்தரவாசிகளாக அரசாங்க செயலகத்தில் பதிவு செய்துள்ளனர். இப்போது இப்பகுதியில் தமிழ் மக்கள் யாரும் இல்லை. அத்தோடு கொக்கிளாய் வைத்தியசாலை அமைந்துள்ள பிரதேசத்தில் தமிழ்ர ஒருவரின் காணியை கட்டாயமாக்கி பௌத்த பிக்கு ஒருவர் பிடித்து வைத்திருக்கிறார். அக்காணியில் அரசமரமொன்று நிற்பதே இதற்க்கு காரணம். இதற்கும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. காணிக்குரியவரும் எங்கும் சென்று முறைப்பாடு செய்யப் பயந்து இப்பிரச்சினையை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையிலுள்ளார். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் தமிழ் மக்கள் சுரண்டப்படுகின்றார்கள். எனவே, இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தாமல் இரு தரப்பு மக்களுக்கும் உரிய வசதி வாய்ப்புக்களை அரசாங்கம் ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்றார்.
எல்லாத் தரப்பும் தாம் சார்ந்த நியாயங்களை வாதிட்டுக்கொண்டிக்கின்றனர். இதனால் பாதிக்கப் படுவதென்பது அப்பாவி மக்கள்தான். எனவே, கொக்கிளாய் சார்ந்த மக்களின் இந்த அடிப்படைப் பிரச்சினைகள் அரசினால் வெகுசீக்கிரம் பூர்த்தி செய்யப்படாமல் போகுமிடத்து, அங்குள்ள இரண்டு இன மக்களுக்குமிடையில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றக்கூடிய நிலை வரலாம் என்பதை அரசு கவனிக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளமை புலனாகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக