திங்கள், 2 ஏப்ரல், 2012

கல்லறைத் தோட்டங்களும் விளைகின்றன...


பொக்கிஷங்களாய்
நாம் பாதுகாத்திருந்த
எங்கள் உறவுகளின்
கல்லறைத் தோட்டங்களில்..
காய்கறிகளை நட்டு
வியாபாரம் செய்கிறார்கள்
எங்கிருந்தோ வந்த
சாத்தானின் உருவங்களை ஒத்த
இதயமில்லாதவர்கள்....
அவர்களுக்குத் தெரியவில்லை போலும்!!
எங்கள் நிலங்களில்
காய்கறிக்குப் பதிலாய்
எங்களவர்களின்...
முண்டங்களும் எலும்புக் கூடுகளுமே
விளையுமென்று....!!

இராமசாமி ரமேஷ்
அளம்பில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக