
தொகை தொகையாக
வதை செய்யப்பட்ட எமதான
வாழ்தலின் இருப்புக்கள்
எச்சங்களைத் தாங்கிய
யதார்த்தத்தின் மிச்சங்களாய்
இழப்புக்களின் புதைவிலிருந்து மீள்வதற்க்காய்
மீட்பரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன...
சாவுகள் எம்மவர்க்கு
சாதாரணமாகி உறவாடிய போதும்....
ஊமைகளாய் மௌனம் கௌவியிருந்த
உலகத்தின் வாய்கள்
இன்று உதவிக்கரம் நீட்டுகின்றனவாம்
உரிமையோடு....
மனிதாபிமானத்தை
அன்று மண்ணுக்குள் புதைத்ததை மறந்து!!
முகங்கள் அறுக்கப்பட்டு
முகவரிகள் அழிக்கப்பட்டு
நம்மவர்கள் முண்டங்களாக மாண்டுபோன
முள்ளிவாய்க்கால் மண்ணில்
விடிவை எதிர்பார்த்து
எம்மினம் தவம்கிடந்தபோது
மனிதம் பேசும் எந்த மாமனிதரும்
உயிர்குடித்த பேய்களிடம் போய்
எமக்காக மன்றாடவில்லையே....!!
அரக்க குலத்தில் ஜனனித்த
மிருகங்களின் தசைப்பசிக்கு
எங்களின் இரத்த உறவுகளின்
உடல்களையல்லவா
உண்ணக்கொடுத்தவர்களாகிவிட்டோம்......
ஆணிவேர்களை
பிடுங்கப் பார்த்தவர்களால்
சில பக்கவேர்களை மாத்திரம்தான்
பதம்பார்க்க முடிந்திருக்கிறது...
எமக்கான தேசத்தில்
எமதான இருப்புக்கள் உறுதியாகும்வரை
பல விருட்சங்களின் விழுதுகள்
வீழ்ந்துகொண்டேயிருக்கும்
வீறுகொண்டு மீண்டும் எழுவதர்க்காய்....!!!
eppady unkalala maddum mudethu?
பதிலளிநீக்குenkalukkum solle tharalaameeeeeee.........
waalka tamil
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றிகள் நண்பரே!!.
பதிலளிநீக்குநீங்களும் தொடர்ந்தும் எழுதுங்க....