எங்கள்
சிதறி மணக்கின்ற
இரத்தமும்....
குதறிக் கிழிக்கப்பட்ட
தசைத் துண்டங்களும்....
ஆங்காங்கே சிதைந்து
ஊனம் வடிகின்ற அங்கங்களும்...
காகங்கள் புசித்து மகிழ்ந்த
எங்கள் உறவுகளின்
உயிர் பிரிந்த உடல்களும்....
சங்காரம் செய்து
உருக்குலைந்த எங்களின் உடமைகளும் ....
பலருக்கு கேளிக்கை !!
இன்னும் சிலருக்கு வியாபாரம்!!
மற்றொரு தொகுதிக்கு அரசியல்...!!
ஏன்? எங்களவர்களுக்கே
எப்பொழுதோ நடந்து முடிந்த கதையாய்.....
விழிதுடித்து வடிக்கிறது கண்ணீர்
வழியில்லை யாரிடமும் சொல்ல
இதயக்கரங்களால் பூசிக்கிறேன்
என் நினைவுக்குள் இருக்கும்
கொலைக்களத்தில் கொல்லப்பட்ட உறவுகளை.....!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக