கிண்ணியாவைப் பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட ந.இஜாஸ் வளர்ந்து வரும் இளம் கவிஞர்ளில் ஒருவராவார். 1993.03.20 அன்று வெளியுலகின் கர்ப்பச் சுருளை எட்டிப் பார்த்த இவர்; 2010.10.14 ஆம் ஆண்டு தினமுரசில் வெளியான அடைக்கப்பட்ட சுதந்திரம் எனும் கவிதையினூடாக இலக்கிய உலகுக்கள் பிரவேசம் கொண்டார்.
குட்டிக்கராச்சினைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பிரதிக் கல்விப் பணிப்பாளரான நஸார் ஆசிரியையான அன்ஸா தம்பதிகளின் புதல்வனான இவர் கிண்ணியா மத்திய கல்லூரியில் உயர்தர கலைப் பிரிவில் கற்று வருகிறார். இலக்கியத் துறையில் இவர் காட்டும் ஈடுபாடானது அளப்பரியது.
கிண்ணியா மத்திய கல்லூரியின் இருமாத சஞ்சிகையான பேனாவின் குரல் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இவர் செயற்பட்டு வருகின்றார். தினகரன்இ தினக்குரல்இ வீரகேசரிஇ விடிவெள்ளிஇ தினமுரசுஇ மித்திரன்இ மெட்ரோ நியூஸ்இ நவமணி மற்றும் மீள்பார்வை போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளான பேனாஇ சிறகுகள்இ மொழி போன்றவற்றிலும் இவரது ஆக்கங்கள் நடை போட்டுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி இந்திய இணையத் தளங்களிலும் இவரது கவிதைகள் வெளி வருகின்றமை இவரது இலக்கிய ஆரோக்கியத்துக்கு வித்திடுகின்றது.
இளம் கவிஞனான இஜாஸ் கவிதைஇ சிறுகதைஇ மேடைப் பேச்சு போன்ற பன்மைத்துவத் தளங்களினூடாக தனது ஆளுமையையும் பல்வேறு போட்டிகளினூடாக வெளிப் படுத்தி வருகின்றார். 2011ம் ஆண்டு நடை பெற்ற தமிழ் தினப் போட்டியில் கலந்து கொண்ட இவர் சிறுகதைப் போட்டியில் வலய கோட்ட மட்டப் போட்டிகளில் முதலிடத்தையும் விவாதப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத் தக்கது. அது மட்டுமன்றி 2011 தேசிய மீலாத் போட்டி சிறுகதைப் போட்டியில் முதலிடத்தையும் பெற்றமை குறிப்பிடத் தக்கது.
பன்மைத்துவ கலாசாரத்தினூடாக சமாதானம் எனும் தலைப்பில் மாவட்ட மட்ட ரீதியாக நடாத்தப் பட்ட கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட இவர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டு வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியமையும் இவரது திறமைக்கோர் எடுத்துக் காட்டாகும்.
அதுமட்டுமன்றி தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி கிண்ணியா பொதுநூலகத்தால் நடை பெற்ற கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தையும் அறிவுக் களஞ்சியப் போட்டியில் முதலிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி 2012 ஆம் ஆண்டு தமிழ் தின கவிதைப் போட்டியில் முதலிடத்தையும் அதே ஆண்டு தேசிய மீலாத் மாவட்ட மட்ட சிறுகதைப் போட்டியில் முதலிடத்தையும் பெற்றமை இவரது திறமையையும் ஆளுமையையும் தெளிவுற எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறாக இளம் வயதிலேயே இத்தனை திறமைகளையும் வெளிக் கொணரும் இவர் கிண்ணியாவுக்கு மட்டுமல்ல இலங்கை நாட்டுக்கும் ஒர வரப்பிரசாதம்தான். அது மட்டுமன்றி தனது முதலாவது கவிதைத் தொகுப்பை விரைவில் வெளியிடவுள்ள இவருக்கு மொழி இத்தருணத்தில் வாழ்த்துக்களைக் கூறி நிற்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக