என் ஒவ்வொரு நண்பருக்கும்! இதை தவறாமல் படிங்க...


வணக்கம் இலக்கிய உள்ளங்களே! உங்கள் ஒவ்வொருத்தரின் உதவிகளையும்
எதிர்பார்த்தபடி தான் இந்த சின்ன கருத்தை உங்களிடம் ஒப்புவிக்கிறேன்.
முல்லைத்தீவு மண்ணிலிருந்து இப்போதுதான் இதுவரை முடங்கிப்போன கலை இலக்கியம்
அறிவியல் ஏனைய பண்பாட்டு அம்சங்கள் என்பன முகிழத் தொடங்கியுள்ளன. இந்த
வரிசையில்தான்...
நானும் எனது நண்பர்களான வசந்தன், நிரோஷா போன்றோரின் ஒத்துழைப்போடு மொழி
என்னும் இருமாத கலை இலக்கிய சஞ்சிகையை ஆரம்பித்து இப்போது வெற்றிகரமாக
இறந்து இதழ்களை கடந்திருக்கிறோம். இருப்பினும், நாம் அடைந்த வெற்றி என்பது
அசாத்தியமானது. முல்லை மண்ணிலிருந்து வளப்பற்றாக் குறைகளோடும் இன்னும்
ஏராளமான இடர்களோடும் தொடரும் இப்பயணத்தை நாங்கள் சிறப்புற நகர்த்த உங்கள்
ஆதரவு என்பது தேவைப்படுகின்றது.
எந்தவிதமான பின்னணியும் இன்றி ஒரு
செயற்பாட்டைச் செய்வதென்பது குதிரைக் கொம்பான காரியம்! இருந்து, முயல்வோம்
என்ற நப்பாசையோடு உருவாக்கினோம் மொழியை! மொழியும் அழகாக கடந்த தை மாதம்
முதலாவது இதழை விரித்து இப்போது இரண்டாவது இதழையும் பிரசவித்து விட்டது.
ஆனாலும், மொழி பரவியுள்ள தூரம் என்பது குறைவுதான். இந்நிலையில் தான்
உங்களுடைய உதவியை வேண்டுகின்றேன்
என்னுடைய முகநூல் நண்பர்களாக
இருக்கின்றவர்களும் உங்களுடைய நண்பர்களும் முடிந்தளவுக்கு உங்களிடம்
அறிமுகமாகின்றவர்களுக்கு இந்த மொழியை அறிமுகம் செய்யுங்கள். இலக்கியத்தை
நேசிக்கும் நெஞ்சங்கள் இந்த உதவியை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
ஒவ்வொரு சஞ்சிகையும் தொடர்ந்து மலர்வது உங்களாலும் வாசகர்களாலும் என்பது
என் நம்பிக்கை. எனவே, எங்கள் மொழியை உலகறியச் செய்யும் பொறுப்பை முகப்
புத்தகத்தில் உள்ள என் நண்பர்களான உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
mail- alampilamal@yahoo.com
phone-0775929258, 0779313664
add- ஆசிரியர், மொழி சஞ்சிகை,
உடுப்புக்குளம், அலம்பில், முல்லைத்தீவு , இலங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக