சிறுகதை
…………………………………………………………..
இன்றுகாலை விடிந்ததிலிருந்து எந்தவொரு வேலையிலுமே எனக்கு ஈடுபடப் பிடிக்கவில்லை. மனதில் என்றுமில்லாதவாறு சோகம் அப்பிக் கிடக்கிறது. புhரம் படர்ந்து அழுத்திக்கொண்டிருப்பதாக தோன்றியது. “ச்சே! என்னதானிருந்தாலும் மதுவுக்கு நான் அடித்திருக்கக் கூடாது! ஏன்தான் அவசரபுத்தி இப்படி முந்திக்கொண்டு வருகிறதோ..?” நினைக்க நினைக்க என்மேலேயே எனக்கு எரிச்சலாக இருந்தது. ஆவள்தான் அறியாமையாலும் என்மேலே கொண்ட அளவுக்கதிகமான அன்பினாலும் அப்படி நினைத்து பேசிவிட்டாளென்றால், எல்லாம் தெரிந்தும் பிரச்சினைக்குக் காரணமாக இருந்த நான்...சரியாக அவளுக்கு தெளிவுபடுத்துவதை விட்டுவிட்டு, அவள் என்னை தப்பாக நினைத்துவிட்டாளென்ற ஒன்றுக்காக அன்னெ இல்லாமல் அப்படி நடந்துகொண்டேனே..!
பாவம் மது! நான் அதட்டிப் பேசினாலே தாங்கிக்கொள்ள முடியாதவள், நானாகப் பேசும்வரைக்கும் அழுதுகொண்டிருப்பாள். இன்று அடித்தே விட்டேன். அதுவும் கல்யாணமாகி இத்தனை நாட்களுக்குப் பின்னர்.. இன்றுதான் கைநீட்டியிருக்கிறேன். இதற்கு எப்படி அழுது வேதனைப்படுவாள்! திடுதிப்பென இந்த இராட்சதக் குணம் எனக்கு எங்கிருந்து வந்தது? என்ன முட்டாள்த்தனமான காரியம் செய்துவிட்டேன்? இப்போதுதான் வேதனைய+ற்றுக்கள் எனக்குள் ஊற்றெடுத்தன. விழிகளில் ஒருவித அழுத்தம்!
என்னுடைய முற்கோபத்தினால், மது இப்போது அறைக்குள் கிடந்து அழுதுகொண்டுதானே இருப்பாள்? ஏன்னையே நம்பி நான் சொல்லாமல் எதையும் செய்யாமல், எனக்காகவே வாழ்ந்துகொண்டிருப்பவளுக்கு நான் கொடுத்திருக்கும் பரிசு, வலியும் கண்ணீரும் தானே! எந்தவொரு பொண்ணும் தன் புருஷன் இப்படி நடந்துகொண்டால் தட்டிக்கேட்பது சரிதானே? இப்படி கேட்காமல் தங்கள் கணவருக்கு பயந்துவாழும் பெண்களால்தான் இன்றைக்கு எத்தனையோ வாழ்வியல் பிரச்சினைகள். மது தன்னவனை யாருக்கும் விட்டுக்கொடுப்பாளா? ஏனக்கு ஏன் இது அந்நேரம் புரியாமல் போனது?
அவள் என்னை அப்படிக்கேட்க காரணமாக இருந்தவனும் நான்தானே! அவள் கேள்விகேட்டபோடு இதுபுரியாமல் உடனே அடிக்கமட்டும் எப்படி இந்த மரமண்டைக்கு மனசு வந்தது? நான் எவ்வளவு பெரிய பாவமான காரியம் செய்துவிட்டேன்! மதுவை நினைக்கையில் உள்ளுக்குள் வலித்தது. அவள் பாதங்களைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கவேண்டும் போலிருந்தது.
மது- அவள்தான் என் மனைவ மதுமிதா!
கடவுளால் என் வாழ்க்கையில் என் குடும்பத்தினருக்குப் பிறகு, என்னை நேசிப்பதற்காக வழங்கப்பட்ட அரிய பொக்கிஷம். நான் முல்லைத்தீவில் உயர்தரம் படித்துவிட்டு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி யாழ்ப்பாணம் வந்தபோது, முதல் தடவையாக அம்மா,அப்பா,சகோதரர்களை பிரிந்து தனிமையானேன். புது இடம்! பேரிதாக அறிமுகமில்லாத மனிதர்கள் என்று நான் அந்நியமாய் உணர்ந்தபோத அறிமுகமானவள்தான் மதுமிதா. நான் வாடகைக்கு அறைஎடுத்து தங்கியிருந்த வீட்டுக்கார அம்மாவின் தங்கைமகள் மட்டுமல்லாமல், என்னோடு அதே வரடம் பல்கலைக்கழகத்தில் கற்றக்கொண்டிருந்த அசாத்திய திறமையான மாணவி! நூன் யாழ்ப்பாணம் வந்து நான்கைந்து மாதங்கள் உருண்டோடி விட, மதுமிதாவுடனான அறிமுகம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. முன்பு சந்திக்கும் பொழுதுகளில் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுபவள், அதன்பின்னரான நாட்களில் தானாக வந்து என்குடம்பம், சகோதரிகள் ஊர்ப்புதினங்கள் தொடர்பாக பல விடயங்கள் விசாரிப்பாள். நானும் எத்தனை நாட்களுக்குத்தான் தனியாக நண்பர்கள் யாருமின்றி இருப்பது? என்னோடு படிக்கின்ற சக மாணவிதானே என வெட்கப்படாமல் சுவாரஸ்யமாகப் பல புதினங்கள், பாடம் தொடர்பான சந்தேகங்கள் என்று பலதும் பத்தையும் பேசத் தொடங்கியிருந்தோம். ஏன் காலம் கொஞ்சம் கரையத் தொடங்க என்னையே மாற்றியிருந்தான் மது.
வன்னியில் அப்போதெல்லாம் அப்பாஸ் ஜீன்ஸ் என்று ஒரு மொடல் இருந்தது. அது அப்போது பிரபலமாக இருந்த நடிகர் அப்பாஸ் திரையில் அணிந்து அறிமுகப்படுத்தியது. எங்களைப் போன்ற இளம் மட்டங்கள் அக்காலத்தில் அதைத்தான் அடித்துப்பிடித்துக் கொண்டு அணிந்துகொள்வதில் ஆனங்தமடைந்தோம். ஏனக்கு பல்கலைக்கழகம் வந்தபின்னும் அந்த மொடல்தான் பிடித்திருக்க அதையே அடிக்கடி போட்டுக்கொள்வேன். மதுமிதா நக்கலாய் சொல்வாள் “ இது என்ன ஸ்டைல்? மாத்துங்க…” எனக்கு யாழ்ப்பாணக் கலாசாரத்தை கற்றுத்தந்தவள் எனக்கு நெருங்கிய ஒரு உறவாக மாறிப்போனாள்.
மதுமிதா பெரிதாக வன்னி மண்ணிடம் உறவில்லாதாவள். அவளுடைய உறவுகள் அதிகமாக வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்க, யாழ்ப்பாணத்திலே ஒருசில உறவினர்கள்தான் மாத்திரமே இருந்தார்கள். ஆவர்களையம் அவள் குடும்பத்தையும் அவர்கள் வெளிநாடு வரும்படி அழைத்து வற்புறுத்தியும், அவள் தனது தாய்நாட்டைவிட்டுப் போக மறுத்துவிட்டாள். ஆதனால், நான் வன்னியென்று தெரிந்துகொண்டதும் அதிகமாக வன்னிமண்ணின் வராலாற்றை அறிந்துகொள்ளும் கேள்விகளைக் கேட்பாள். ஆங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை, பிரச்சினைகள் தொடர்பாக அவள் விருப்பத்தோடு கேட்பது எனக்குள் கந்தோசமாகவும் அதேவேளை வியப்பாகவும் இருக்கும். ஏனெனில் வன்னியேன்றாலே அங்குள்ளவர்கள் எதவம் தெரியாத பட்டிக்காட்டார்; என்பதுபோலப் பாரக்கும் நம்மவர்களிடையே மது விதிவிலக்காய் தெரிந்தாள். மக்களையும் தன் தேசத்தையும் நேசிப்பவாள் பாசத்தைக் காட்டினாள். ஏம் மக்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு “அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் ஆகாஷ்’’ என்பாள். அதற்கு நான் “ நீயொரு ஆசிரியையாகப் போகிறவள் தானே? அதனால்.. ஆசிரியர் வளம் குறைவாக இருக்கும் வன்னிப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு படிப்பிக்கலாம் தானே..!’’ என்பேன். நான் சொன்னதுபோலவே தனக்குள்ளும் ஆசையிருப்பதாகக் கூறி, “அது கண்டிப்பாய் நடக்கும்..’’ என்பாள். இப்படி எம்மண்மீது அதிகப்படியான நேசம் கொண்டவளாய் மதுமிதா இருந்தது, எனக்குள் அவள்மீதானதொரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. நாளடைவில் அது காதலாக மலர்ந்து அவளிடம் அதைச் சொல்லவும் வைத்துவிட்டது.
ஏன்னைப் போலவே மனதினுள் காதலை வளர்த்துக்கொண்டிருந்த மது, நான் காதலைச் சொன்னதும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டாள். அதன்பிறகு என்னோடு ஒருநாள்கூட பேசாமல் இருக்க மாட்டாள். ஏதாவது Nலையாக நான் பேசாமல் இருந்துவிட்டால் சரி! செல்லமாக திட்டித் தீர்ப்பாள்.
காலங்கள் கரைந்தோடி கல்வியும் நிறைவுற்று, இருவரும் ஆசிரியர்களாக வெளியேறினோம். அவளும் வன்னிக்கே வந்தாள். நான் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இணைந்துகொள்ள மது, என் சொந்தவூரான முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் தன் பணியை ஆரம்பித்தாள். நான் எந்த முடிவு எடுத்தாலும் அதற்க்கு எதிர்ப்புக் காட்டாமல் என் முடிவு சரியாகத்தானிருக்கும் என்று சம்மதம் சொல்லும் என்வீட்டார என் காதலையும் ஏற்றுக்கொண்டனர். அதேபோல மதுவின் உறவுகளும் என்னை ஏற்றுக்கொண்டார்கள். இருவீட்டாருக்கும் எம் காதலைத் தெரிவித்து அவர்களின் சம்மதத்துடனேயே இருவருடங்கள் கழித்து.. போனவருட நடுப்பகுதியில் கல்யாணம் செய்துகொண்டோம். மணமானதும், வேலையிலிருந்து விலகவா என மது கேட்க நான் வேண்டாமென தடுத்து நமது பங்களிப்பு நிச்சயமாய் எம் தேசத்துக்கு வேண்டும் என்றேன். அவளும் சம்மதித்து இன்றுவரை சேவையாற்றிக் கொண்டிருக்கிறாள்.
இப்படி மகிழ்ச்சியாய்ப் போய்க்கொண்டிருந்த எமது வாழ்க்கையில் இதோ… ஒரு வாரமாகத்தான் சிறுசிறு கருத்துமோதல்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. அதற்குக் காரணம் அவளது தம்பி அஷ்வந்த்! அவன் ஒரு பெண்ணைக் காதலித்து, அவள் திருமணத்திற்கு முன்னமே கர்ப்பமாகிவிட்டாள்.
அதனால், தன் திருமணத்தை நடத்தி வைக்கும்படி அஷ்வந்த் என்னிடம் சொல்ல, நானும் சம்மதித்து, அதற்கான காரியங்களில் ஈடுபடத்தொடங்கினேன.; ஆனால், அதிலே இன்னுமொரு சிக்கலும் வந்து நின்றது.
தாய் தந்தை உறவுகளில்லாத அந்தப் பெண்ணை மதுவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்களென்றும், தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி தனது உறவுப் பெண் ஒருத்தியை மணமுடித்து வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அஷ்வந்த் சொன்னான். அத்தோடு மேலுமொரு குண்டையும் தூக்கிப் போட்டான். “தயவு செய்து அத்தான்… என் பிரச்சினையையும்… நீபா கர்ப்பமான விஷயத்தையும் அக்காவிடம் சொல்லிவிடாதீங்க… அவள் என்னோடு கடைசிவரை பேசவே மாட்டாள்…” என்றான்.
ஆமாம்! மது பேசமாட்டாள் தான். ஏனென்றால், யாருமில்லாதவள் என்றாலும் பரவாயில்லை. தன் தம்பி மணம் முடிக்கும் முன்பே இப்படி தப்பாய் நடந்திருக்கிறானே என்று கண்டபடி திட்டுவாள். அதனால்தான் அவனின் பிரச்சினையை மதுவிடம் சொல்லாமலே இரகசியமாகக் கையாண்டு வந்தேன்.
அஷ்வந்தின் காதலி நீபா, அடிக்கடி என்னிடம் போனில் போசுவாள். “நானும் பயப்பிடாதே! வெகு சீக்கிரமே… பேசி சம்மதம் வாங்குகிறேன்….” என்று கூறி சமாதானம் செய்வேன். இப்படி நான் போனிலே பேசுவதும, மது இல்லாத வேளை அவள் என்னுடன் பேசுவதும் தொடர்ந்தது. ஒரு நாள் நீபாவின் தொலைபேசி அழைப்பு வந்த போது மதுவே தொலைபேசியை எடுத்துவிட்டாள். மது… யார் பேசுவது என்று கேட்டதும் கட் பண்ணியது; தான் இப்போது பிரச்சிணைக்குக் காரணம். மது என்னிடம் தானாக வந்து கேட்டாள். நான் மழுப்பிவிட்டேன். திரும்பவும் கேட்டு வந்தாள். தெரியும். தெரிந்த பெண்… உறவுக்காரி என்றேன். இன்றுக் காலையும் அப்படித்தான்! கேட்டாள், உறவு என்றேன். “எந்த மாதிரியான உறவு?” என்றாள். எனக்கு கோபம் வந்து அடித்துவிட்டேன். அத்தோடு அழுதுகொண்டு அறைக்குள்ளே தான். மதியம் இரண்டு மணியாகியும் இன்னும் சாப்பிடவில்லை.
நானும் இவ்வளவு நேரமாகியும் போய்க் கூப்பிடவில்லை. ஏனக்கு அப்போது கோபமாகத்தானிருந்தது. தன் கணவனைப் புரிந்துகொள்ளாமல் பேசலாமா? இருந்தாலும், அவள் அவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தை யோசித்துப் பார்த்தபோது, தவறு என்னில்தான் என்பது புரிந்தது.
என்மேல் கொண்ட அளவு கடந்த அன்பினாலும் நம்பிக்கையினாலும் தான், மது அப்படிக் கேட்டிருக்கின்றாள். யாராவாது ஒரு பெண் கணவனோடு மட்டும் கதைப்பது.. மனைவி கேட்டதும் துண்டிப்பதும் எந்த மனைவிக்குத்தான் சந்தேகத்தை உண்டுபண்ணாது? மதுவும் சராசரிப் பெண்தானே?
சரி! நடந்தது நடந்துவிட்டது. தப்புச் செய்தவர்தான் இறங்கிப் போகவேண்டும். இத்தனைக்கும் காரணமான அஷ்வந்தின் பிரச்சினையை மதுவிடம் தெளிவாக எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும். ஆப்போதுதான் நடந்த தைப் புரிந்துகொண்டு ஆகவேண்டிய காரியங்களை செய்யமுடியும். இதனால் அவனின் பிரச்சினையும் முடிவுக்குவரும், அத்தோடு எங்களுக்குள் நிலவும் பனிப்போரம் அமைதியாகும். புhவம் மது!
இதுதான் மதுவுக்கு நான் அடித்த கடைசித்தருணமாக இருக்கணும். ஒரு தெளிவோடம் தவறை உணர்ந்த மனதோடும் மது இருக்கும் அறை நோக்கி நடக்கிறேன்.
-முடிந்தது.-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக