மிக வேகமாக மக்களிடம் நடப்பு விடயங்களை செய்திகளாக்கி கொண்டுசென்று சேர்ப்பது இப்போதைய நவீன ஊடகங்களான இணையத் தளங்கள் தான். இவற்றில் பல ஒலி,ஒளி ஊடகங்களை விட முதன்மை வகிப்பது செய்திகளை பிரசுரிக்கும் இணைய தளங்களே! இவை இப்போதெல்லாம் தடம் புரள்வதான பாதையில் நகர்ந்து கொண்டிருப்பது அடிக்கடி இடம்பெறுகிறது.
அதாவது, செய்திகளை முந்திக் கொண்டு வெளியிடவேண்டும் என்ற நோக்கோடு அடித்துப் பிடித்துக்கொண்டு தமக்குக் கிடைக்கும் ஆராயப்படாத தகவல்களை உடனேயே செய்திகளாக்கி அவற்றில் தொடர்பு படாத புகைப்படங்களைப் பிரசுரித்து தம்மை முதன்மையான செய்திச் சேவைகளாக நிலை நிறுத்த முனைகின்றன. இப்படியான செயற்பாடுகள் பலருடைய வாழ்க்கையில் களோபரத்தையும், அசம்பாவிதங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்த இணையதளங்களின் நிர்வாகிகள் மறந்து விடுவது வேதனையளிக்கிறது.
இந்த தவறான செய்திகளை வெளியிடுவதோடு அச்செய்திகளில் வாசிக்க முடியாதளவுக்கு எழுத்துப் பிழைகளும் சொற் சிதைவுகளும் காணப் படுகின்றன. கருத்து மாறிய வார்த்தை பிரயோகங்களும் இரட்டை அர்த்த வசனங்களும் பயன்படுத்தப் படுகின்றன.
இன்று இணையத்தளங்கள் பல தரப்பினரும் பார்வையிடும் தளங்களாக மாறிவிட்டன. இவ்வாறான செயற்பாடுகள் இணையத்தளங்கள் புறக்கணிக்கப் பட்டுப் போகும் நிலைக்கு வழிகோலும் என்பதில் ஆச்சர்யமில்லை. எனவே, நம் நாட்டிலுள்ள இணையதளங்களும் சரி, வெளிநாடுகளிலிருந்து இயங்கும் தளங்களும் சரி. இந்த விடையத்தை அனைவரும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தமுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக